முட்டை பிட்சா செய்வது எப்படி?

egg-pizaa-food-cooking-tips
முட்டை பிட்சா செய்வது எப்படி?

வீட்டிலேயே பிட்சா செய்ய தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு முட்டை பிட்சாவை எப்படி எளிய முறையில் வீட்டிலேயே செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த முட்டை பிட்சாவின் செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்­களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

பிட்சா பேஸ் -    – 1
எண்ணெய்      – 1 தே.க
வெங்­காயம்   – 1 (நறுக்­கி­யது)
தக்­காளி    -1 (நறுக்­கி­யது)
பூண்டு     – 2 பற்கள் (நறுக்­கி­யது)
முட்டை        –1 (வேக வைத்­தது)
தக்காளி கெட்சப் - 3 மே.க
உப்பு   – தே.அ.
சில்லி ப்ளேக்ஸ் / மிளகாய் தூள் -
                –1 தே.க
உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் -      
                – 1 தே.க
சீஸ்   - தே. அ. (துரு­வி­யது)

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

பின் அதில் தக்காளி கெட்சப் சேர்த்து கிளறி, உப்பு, மிளகாய் தூள், உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு ஒரு மைக்ரோ ஓவனில் வைக்கும்படியான தட்டில், பிட்சா பேஸை வைத்து, அதன் மேல் வதக்கிய கலவையை பரப்பி வைத்து, முட்டைகளை நீளமாக நான்கு துண்டுகளாக்கி வைக்க வேண்டும்.

பிறகு அதன் மேல் சிறிது நறுக்கிய வெங்காயம், தக்காளியைத் தூவி விட வேண்டும்.பின் துருவிய சீஸை தூவி, மேலே உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் மற்றும் சில்லி ப்ளேக்ஸை தூவி மைக்ரோ ஓவனில் 1 நிமிடம் அல்­லது தவா என்றால் மூடி வைத்து குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைத்து து இறக்கி பரிமாறினால், முட்டை பிட்சா ரெடி.