ரவா கேக் செய்வது எப்படி?

ravaa-cake-cooking-tips
ரவா கேக் செய்வது எப்படி?

தேவையானவை:

1 1/2 கப் ரவை
1/2 மைதா
1/2 கப் உருக்கிய பட்டர் அல்லது நெய் அல்லது சோள எண்ணெய்
1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
1/4 தேக்கரண்டி சோடா பைகார்பனேட்
1 கப் பால்
1/2 கப் சர்க்கரை (அரைத்து)
15-20 பாதாம் அல்லது பிடித்த நட்ஸ் அல்லது திராட்சை
இனிப்பு சிரப் –
1 கப் சர்க்கரை
1 கப் தண்ணீர்
1 தேக்கரண்டி (விரும்பினால்) ரோஜா சாரம் (rose water)
1 டேபிள் ஸ்பூன் தேன்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

செய்முறை:

1. முதலில், ஒரு கடாயில் இனிப்பு சிரப் செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து, சக்கரை கரையும் வரை காய்ச்சி ஆர வைக்கவும்.
2. ரவை, மைதா, அரைத்த சக்கரை, பேக்கிங் பவுடர், மற்றும் சோடா பைகார்பனேடை ஒன்றாக கலக்கவும்.
3. அதில் உருக்கிய பட்டர் சேர்த்து கலக்கவும்.
4. அதன் பின்னர், பால் ஊற்றி நன்றாக கலக்கவும்.

5. ஒவனை 180 Celcius,5 நிமிடம் சூடாக்கவும். 8 inci கேக் பானில் பட்டர்/எண்ணெய் தடவவும்.
6. தயாரான கேக் மாவை 8 inci கேக் பானில் அல்லது பிடித்தமான கேக் தட்டில் ஊற்றி, அதற்க்கு மேல் பாதாம் அல்லது திராட்சை வைத்து, 30 நிமிடம் அல்லது வேகும் வரை ஒவனில் பேக் பன்னவும்.
7. தயாரான கேகின் மீது காய்ச்சி வைத்த இனிப்பு சிரப் ஊற்றி பரிமாறவும்.
சமைக்கும் நேரம்: 1 மணி நேரம்

பரிமாறும் அளவு: 16 கேக் துண்டுகள் கிடைக்கும்#