மோதிச்சூர் லட்டு செய்வது எப்படி?

mothichur-laddu-sweets-cooking-tips
மோதிச்சூர் லட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
கடலை மாவு – 100g
சர்க்கரை – 200g
உப்பு – 1 சிட்டிகை
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
ஆரஞ்சு நிறம் – 1 சிட்டிகை
ஏலக்காய் பொடி – ¼ தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 10
சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை
பூந்தி செய்ய ஒரு பாத்திரத்தில 1 கப் கடலை மாவு சேர்த்துக்கோங்க..அது கூட ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, ஆரஞ்சு நிறம் ஒரு சிட்டிகை சேர்த்துக்கோங்க. எல்லாத்தையும் நல்லா கலந்தவிட்டுட்டு, கொஞ்சம்  தண்ணீர் ஊத்தி கட்டி  இல்லாம பேஸ்ட் போல கலந்துக்கோங்க..
அடுத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துக்கோங்க. ஒரே தடவையில தண்ணீர் சேர்த்தா கட்டி பிடிச்சிரும்.

ஒரு கடாயில எண்ணெய் சேர்த்து சூடானதும், பூந்தி கரண்டி இல்லைன்னா மோத்தி சூர் லட்டு கரண்டி இருந்தா அதுல மாவை ஊத்தி கையால் தட்டுங்க... தட்டும் போது கவனமா இருக்கணும். கடாய்க்கும் கரண்டிக்கும் ஒரு 10செமி இடைவெளியாவது இருக்கணும். பூந்தி எண்ணெய்ல போட்டதும் மேலே எழும்பி வரணும். இதுதான் எண்ணெய்க்கான பதம்.

நுரை அடங்கி பூந்தி வெந்ததும், ஒரு வடிகட்டியால எடுத்துக்கோங்க... பூந்தி 20 – 30 நொடிகள்ல வெந்துடும்... இது போல எல்லா மாவையும் பூந்தியா போட்டு வெச்சுக்கோங்க.

சர்க்கரை பாகு செய்முறை :

ஒரு பாத்திரத்தில 1 கப் சர்க்கரை சேர்த்துக்கோங்க. அது கூட 1/4  தேக்கரண்டி ஏலக்காய் பொடி, 1 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில கொதிக்கவிடுங்க.  சர்க்கரை கரைஞ்சு , பிசுபிசுப்பு தன்மை வர்ற வரைக்கும் கொதிக்கவைங்க.

இப்பொழுது செஞ்சு வெச்ச பூந்தி எல்லாத்தையும் அதில சேர்த்துக்கோங்க. மிதமான தீயில் வெச்சு 2 நிமிசம் கிளறிவிட்டுட்டு, அடுப்பை அணைச்சு பாத்திரத்தை மூடி வெச்சுடுங்க...

20 நிமிஷத்துக்கு பிறகு மூடியை திறந்து கிளறிவிடுங்க..., பூந்தி சர்க்கரை பாகை உறிஞ்சி மென்மையா மாறி இருக்கும். இது கூட பொடிச்ச  முந்திரிப் பருப்புகளை சேர்த்துக்கோங்க.

எல்லாத்தையும் ஒரு தடவை நல்லா கிளறி விட்டுட்டு , கையில் நெய் தடவி, சின்ன சின்ன சிறு உருண்டையா உருட்டிக்கோங்க.

அவ்வளவுதான் ப்ரண்ட்ஸ், சுவையான மோத்திச்சூர் லட்டு தயார்.  
இந்த வருசம் தீபாவளிக்கு இதையும். உங்க பலகார லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க.

அப்புறம் வழக்கம் போல பதிவுக்கு லைக் போட்டுட்டு, உங்க நண்பர்களோட ஷேர் பண்ணிக்கோங்க. மறக்காம நம்ம பேஜ் follow பண்ணிக்கோங்க. நிறைய ரெசிபி வந்துட்டே இருக்கு.