சீரக மீன் வறுவல் செய்வது எப்படி?

fish-varuval-cooking-tips
சீரக மீன் வறுவல் செய்வது எப்படி?

தேவையானவை:

 மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 10
இஞ்சி - 1 இன்ச் நீளம்
பூண்டு - 10
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு, சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
மல்லி பொடி - 1 தேக்கரண்டி
மிளகுப்பொடி - 1 தேக்கரண்டி
சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் பொரிக்க - 75 மில்லி

செய்முறை

மீனை நன்கு சுத்தமாக கழுவிக்கொள்ளவும். வெங்காயத்தை உரித்து, அதனுடன் சீரகம் சேர்த்து அரைக்கவும். இஞ்சி, பூண்டை நன்கு அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு போட்டு சிவந்ததும், அதனை எடுத்து மீனின் மீது போடவும்.

மீனை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்த வெங்காயம், இஞ்சி,பூண்டு விழுது, மல்லி, மிளகு,சீரகப் பொடி, தயிர்,எலுமிச்சை சாறு, சோள மாவு மற்றும் உப்பு போட்டு நீர் ஊற்றாமல் பிசறவும். இதனை குளிர்பதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின்னர் அடுப்பில் தவா வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மீனை எடுத்து உடையாமல் அடுக்கவும். தீயை குறைத்து வைக்கவும். மீன் போட்டு 5 நிமிடம் கழித்து, ஒரு பக்கம் வெந்ததும்,மீனை பத்திரமாக உடையாமல், அடியில் மெலிதான கரண்டி கொடுத்தி திருப்பவும். மறுபக்கமும் வெந்ததும் மீனை எடுத்து விடலாம்.