சில்லி மட்டன் வறுவல் செய்வது எப்படி?

chilli-mutton-varuval-recipe
சில்லி மட்டன் வறுவல் செய்வது எப்படி?

தேவையானவை:

ஆட்டு இறைச்சி அரை கிலோ
மிளகாய்த் தூள் 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 5
உருளைக்கிழங்கு கால் கிலோ
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
பூண்டு பல் 5
சின்ன வெங்காயம் 1 கப்
இஞ்சி ஒரு துண்டு
வினிகர் ஒரு டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி

செய்முறை :
பூண்டைத் தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

உருளைக்கிழங்கைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், வினிகர் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இறைச்சியை நன்கு சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வேக வைத்த இறைச்சியைச் சேர்க்கவும்.

அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து, உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.
கலவை கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

சுவையான சில்லி மட்டன் வறுவல் தயார்.