Breaking News :

Monday, February 10
.

’யாத்திசை’ பட பூஜை!


இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது 'யாத்திசை' படம் மூலம் தமிழ் சினிமாவில் புது வெளிச்சத்தை பாய்ச்சியவர். அவர் படத்தை கையாளும் திறன், கதை சொல்லல் இதெல்லாம் பார்வையாளர்களையும் சினிமாவில் வர்த்தக வட்டாரத்தினரையும் கவர்ந்துள்ளது.

’யாத்திசை’ படத்தை அடுத்து அவர் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஜேகே ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே கமலக்கண்ணன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கான பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. பூஜையில் சக்தி ஃபிலிம் பேக்டரியின் விநியோகஸ்தர் பி.சக்திவேலன், ஜி.தனஞ்செயன், சித்ரா லட்சுமணன், இயக்குநர் மணித்திர பி மூர்த்தி, ’அயலி’ வெப் சீரிஸ் புகழ் இயக்குநர் முத்து, தயாரிப்பாளர் கணேஷ் காமன் மேன், யூடியூபர்ஸ் மதன் கௌரி, மிஸ்டர் ஜி.கே. மற்றும் செர்ரி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

’யாத்திசை’ படத்தில் நம்பிக்கையூட்டும் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சேயோன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘விடுதலை’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

ஜே.கே ஃபிலிம் இன்டர்நேஷனல், ஜே.கமலக்கண்ணனின் முதல் தயாரிப்பாக இப்படம் அமைகிறது. அவர் கூறுகையில்,

“திரையுலகில் என்னுடைய சிறிய பங்கும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. ’யாத்திசை’ படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தரணி ராசேந்திரனுடன் ஜேகே ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறது. எங்கள் தயாரிப்பு நிறுவனம் நல்ல படங்களைத் தரவும், திறமையான மற்றும் ஆர்வமுள்ள படைப்பாளிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும். படத்தின் ஜானர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

*தொழில்நுட்ப குழு:*
தயாரிப்பு: ஜேகே ஃபிலிம் இன்டர்நேஷனல்,
தயாரிப்பாளர்: ஜே. கமலக்கண்ணன்,
இயக்குநர்: தரணி ராசேந்திரன்,
ஒளிப்பதிவாளர்: ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன்,
எடிட்டர்: மகேந்திரன் கணேசன்,
இசையமைப்பாளர்: சக்ரவர்த்தி,
ஒலி வடிவமைப்பு: சரவணன் ராமச்சந்திரன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-அப்துல் நாசர்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.