Breaking News :

Thursday, May 02
.

நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை


நடிகர் விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
இதுதொடர்பாக, அந்த தனியார் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: 
“விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது” என அந்த அறிக்கையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.