Breaking News :

Saturday, March 02
.

பிறர் பசியை போக்கிய வள்ளல் விஜயகாந்த்


மதுரையில் அரிசிஆலை நடத்தி வந்த குடும்பத்தில் இருந்து சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு வந்து விட்டார் விஜயராஜு. வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் சாப்பாட்டுக்கே கஷ்டம்... ஊரில் இருந்தும் எந்த உதவியும் பெற மனமில்லை.

 

இரண்டொரு படங்கள் நடித்த பின்னும் கூட அடுத்த வாய்ப்புகள் வரவில்லை. மீண்டும் கஷ்டம்....

 

ஒரு வழியாக ரஜினி கமலுக்கு இணையாக எந்த சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்தார் கேப்டன்.

 

அப்போதெல்லாம் நான்கு கேட்டகிரியாக ஷுட்டிங் ஸ்பாட்டில் உணவுகள் தரம் பிரித்து வழங்கப்படும். ஹீரோ, ஹீரோயின், டைரக்டர், கேமரா மேன் போன்றோருக்கு ஒரு வகை, 

 

அசிஸ்டன்ட் கேட்டகிரிக்கு தனி, லைட்மேன் போன்றோருக்கு தனி, கடைசியா ட்ரைவர், மற்ற சிப்பந்தி வேலை பார்ப்பவர்களுக்கு தனி... இதுதான் காலங்காலமாக இருந்த வழக்கம்.

 

ஆனால் விஜயகாந்த் அவர்கள் படப்பிடிப்பில் மட்டும் அனைவருக்கும் ஒரே வகையான சாப்பாடு, விஜயகாந்த் மட்டன் சாப்பிட்டால் கடைசி பணியாள் வரை மட்டன் சாப்பாடு, அவருக்கு மீன் பொறித்தால் கடைசி பணியாள் வரை மீன் கொடுக்க வேண்டும். 

 

சாப்பிடுறதுல என்னைய்யா ஆள் பாத்து கொடுக்குறிங்க ன்னு சொல்லி அத்தனை பேருக்கும் ஒரே சாப்பாடு ன்னு கொண்டு வந்தது விஜயகாந்த்...

 

தயாரிப்பாளர் தலைல அந்த செலவை கட்டல.... என் சம்பளத்துல இருந்து அத பண்ணுங்க... மிச்சத்தை மட்டும் கொடுங்கனு சொல்லிட்டு போயிடுவார்...

 

கோடம்பாக்கத்துல அவரோட அலுவலகத்துல அணையா விளக்கு மாதிரி அடுப்பு எரிஞ்சுட்டே இருக்கும்... பசின்னு வர்ற அத்தனை பேரும் சாப்டுட்டு போயிட்டு இருப்பாங்க.

 

சிலர் லாம் மெஸ் ன்னு நினைச்சு உள்ள வந்துட்டு சாப்டுட்டு ரூபாய் கொடுக்க போனப்போ இது விஜயகாந்த் சார் ஆஃபீஸ் ங்க ன்னு சொல்லி அனுப்பி வைப்பாங்களாம்.

 

அந்த அளவுக்கு பிறர் பசியை போக்கிய வள்ளல்.

 

காலாகாலமா கடன்ல மட்டும் இருக்குனு கணக்கு காட்டுன நடிகர் சங்க கடனை யெல்லாம் அடைச்சு அத நல்ல நிலைக்கு கொண்டு வந்த சிறந்த நிர்வாகி ‌.

 

எதிர்கட்சி தலைவர் அளவுக்கு வெகு விரைவில் வந்த அரசியல்வாதி...

 

அவருக்கு சினிமால நடிக்க வந்த அளவுக்கு நிஜத்துல நடிக்க வரல.

 

அவரோட இயல்பை எல்லா இடத்துலயும் வெளிப்படுத்தினார். அது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

 

சிரிச்சாலும் வெள்ளந்தியான சிரிப்பு... ஒருத்தரோட கஷ்டம்னாலும் அத பாத்து கண்ணீர் விட்டு அழுற மனசு... அப்படிப்பட்ட ஒரு மனுஷன்.

 

பல லட்சக்கணக்கான பேரின் பசியை போக்குன, கண்ணீரைத்துடைத்த விஜயகாந்த் மதுரை மாநாட்டுல சொல்றார்.

 

"என் சொந்த காசுலதான் கட்சி துவங்குறேன். காசு வரும் போகும். இது இல்லாமலே போனாலும் பரவால்ல... மனுசன் என்னய்யா அதிகபட்சமா தேட போறான் சாப்பாடுதான...

 

இத்தன லச்சம் பேரு இங்க  வந்துருக்கிங்க, உங்க ஒவ்வொருத்தர் வீட்லயும் ஒரு வேளை சோறு வாங்கி சாப்டாலும் என் ஆயுள் பத்தாது. அவ்வளவு அன்பை தேடி வச்சுருக்கேன்" ன்னு சொன்னார்.

 

ஆழ்ந்த இரங்கல் கேப்டன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.