விஜய் சேதுபதியின் 50ஆவது படம் ‘மகாராஜா’.
இந்தப் படம் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. மேலும் இதன் ரிலீஸ் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு ‘ACE’ என தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தை ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ பட இயக்குநர் ஆறுமுக குமார் இயக்குகிறார்.
கன்னடத்தில் வெளியான ‘Sapta Saagaradaache Ello’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ருக்மணி வசந்த் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
திவ்யா பிள்ளை, பப்லூ பிருத்வீராஜ், பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ் குமார், டெனஸ் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வீடியோவையும், முதல் தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
கிராஃபிக்ஸில் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த இறுதியில் மாஸான விஜய் சேதுபதியின் தோற்றம் வெளிப்படுத்தப்படுகிறது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் வெளியானது. அடுத்து ‘மகாராஜா’, ‘விடுதலை பாகம் 2’ படங்கள் திரைக்கு வர உள்ளன.