Breaking News :

Thursday, May 15
.

சசிகுமார் சிமரன் நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி!


சசிகுமார் புதிதாக நடித்திருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படத்தில் முதன் முதலில் சிம்ரனுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

சிம்ரன் தான் தனக்கு ஜோடி என்ற உடனேயே அவருக்கு ஆச்சரியமாக இருந்ததாம். நாம் திரையில் பார்த்து ரசித்த சிம்ரன் நமக்கு ஜோடியாக நடிக்கிறாரா? என ஆச்சரியப்பட்டு இருக்கிறார்.

இப்படத்தில் இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடியால் தமிழகத்திற்கு குடிபெயரும் குடும்பமாக இவர்கள் நடித்திருக்கிறார்களாம்.

பொருளாதார நெருக்கடியால் சென்னைக்கு குடிபெயரும்  இவர்கள் அங்கு எல்லோருக்கும் பிடித்த ஒரு குடும்பமாக மாறுகிறார்களாம்.அது எப்படி என்பதை சுவாரசியமாக விளக்கி இருக்கிறாராம் இயக்குனர்.

இப்படத்தின் கதையை இன்ச் பை இஞ்சாக கேட்ட சசிகுமாருக்கு படத்தில் ஒரு இடத்தில் கூட அலுப்பு தட்டவில்லையாம் அவ்வளவு நேர்த்தியாக இப்படத்தின்  கதையை இயக்குனர் சொன்னாராம்..

இப்படத்தில் 16 வயது பையன் ஒருவருக்கு தந்தையாக நடிக்கும் சசிகுமார், ராமேஸ்வரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போது சிம்ரனுக்கும் இவருக்கும் ஒரு பாடல் காட்சி ஒன்றை எடுத்து இருக்கிறார்கள்,. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் நெஞ்சில் ஜில் ஜில் என்ற பாடல் எடுத்த இடமாம் அது.

அந்த இடத்தில் சிம்ரனுக்கும் சசிகுமாருக்கும் பாடல் எடுத்தவுடன், நான் பார்த்து ரசித்த ஒரு முக்கிய படத்தில், இந்த பாடல் காட்சி எடுத்த இடத்தில் சிம்ரன் உடனே நாமும் நடிக்கிறோமே என மகிழ்ந்தாராம் சசிகுமார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.