Breaking News :

Friday, October 11
.

The Hours: மூன்று பெண்களின் ஒரு நாள் நிகழ்வுகளை வைத்து திரைக்கதை!


The Hours என்ற திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்த்தேன். வெவ்வேறு காலகட்டத்தில் வாழும் மூன்று பெண்களின் ஒரு நாள் நிகழ்வுகளை வைத்து திரைக்கதையை அருமையாகப் பின்னியுள்ளனர்.

Michael Cunninghamன் புலிட்சர் பரிசு பெற்ற 'த ஹவர்ஸ்' நாவலின் அடிப்படையில் அமைந்த கதை இது.
மூன்று பெண்களின் வாழ்க்கையையும் Virginia Woolf 1925ல் எழுதிய Mrs Dalloway நாவல் இணைக்கிறது. பிடித்தம் இல்லாத திருமண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கைக்காக ஏற்கும் நிர்பந்தங்கள், பெண் என்பதால் சுமக்கும் சிலுவைகள் என்று பெண்களின் நுட்பமான மனவோட்டங்கள் படம் முழுக்க. மெரில் ஸ்டீரிப், ஜூலியானே மோர், நிகோல் கிட்மேன் மூவரின் நடிப்பும் அற்புதம் ❤️ Virginia Woolfஆக நடித்திருக்கும் நிக்கோல் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறார்.

1941ல் Virginia ஆற்றில் இறங்கி தற்கொலை செய்து கொள்வதுடன் படம் துவங்குகிறது. படத்தின் இறுதியில் இரண்டு பெண்களின் உரையாடல் இன்னும் நினைவில் நிற்கிறது.

நடுத்தர வயது கிளாரிஸ்ஸா: 'உங்கள் மகனுக்கு ஆறேழு வயது இருக்குமா? அவனை ஏன் தவிக்கவிட்டுப் போனீர்கள்?'

முதிர்ந்த மூதாட்டியான லாரா: 'மகனை மட்டுமல்ல. இரண்டு குழந்தைகளை அவர்களின் தந்தையிடம் விட்டுவிட்டு, யாருக்கும் தெரியாமல் கனடா போனேன். அங்கு நூலகத்தில் வேலை செய்தேன். சிறுகுழந்தைகளை பரிதவிக்கவிட்டுப் போனதாகவும், 'நீ எல்லாம் ஒரு தாயா?' என்றும் இன்றுவரை உலகம் என்னை ஏசிக் கொண்டிருக்கிறது.

இழிவாகப் பேசுகிறது. அதனை நான் நன்கறிவேன். I chose that over death (நான் அப்படிப் போகவில்லை என்றால் மரணத்தைத் தேர்ந்தெடுத்திருப்பேன்)' மென்மையாகச் சொல்கிறார்.

I chose that over death என்ற வசனத்தின் ஆழமான வலியை, வலிமையை ஒவ்வொரு பெண்ணாலும் உணர முடியும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.