Breaking News :

Tuesday, December 03
.

சுவர்ணலதா என்னும் ஹம்மிங் குயின்!


பணிச்சுமைகளை கடந்து களைத்து போயி ஒரு ஓரமா ஹாயா படுக்கும் போது பிஞ்சி விரலால தலைய கோதி விடும் போது வரும் பாருங்க ஒரு ஆத்ம திருப்தி... அந்த அனுபவத்தை யாரும் தீண்டாமலேயே செவி வழி தொடுதலால் உணர்ந்தது.

“மாலையில் யாரோ மனதோடு பேச. மார்கழி வாடை மெதுவாக வீச...” பாடலை இசைஞானியின் இசையில் ஹம்மிங் குயினின் குரலில் கேட்கும் போது... “நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது” உச்சஸ்தாயில பாடும்போது பக்க துணையா கோரஸ் வயலின்களின் ஸ்பரிசம்.

ஆயிரம் ஆயிரம் வண்ணத்து பூச்சிகள் மனசுக்குள் மந்தாரமாக குறு குறுப்பாக பறந்தது போல இருந்தது “குயில் பாட்டு ஓ வந்ததென்ன இள மானே.. அதை கேட்டு ஓ சென்றதென்ன...” இந்த இளமானின் இனிய குரலில் தித்திப்பாக. “ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க நெருங்க நெருங்க பொருங்க பொருங்க...
அந்த ஓஹோ... ஹோங்கும் போது உடம்பில் உள்ள அத்தனை உணர்ச்சிகளையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்து குவிச்சிருவாப்படி தன் குரலால்...

“நீ எங்கே என் அன்பே நீயின்றி நான் எங்கே.. “காதலின் அத்தனை வலியையும் துயரத்தையும் சோகத்தையும் வேதனைப்படுத்தி வெச்சிருப்பாரு அவுங்க குரல்ல... “உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே...” அந்த நின்னேனே, சொன்னேனே முடிவில ஒரு அற்புத டைனமிக்க ஸ்வர்னலதாமா கொடுத்திருப்பாங்க... ஆஹா.... பரவசம்...

“அட ஊருசனம் யாவும் ஒற்றுமையா சேரும் வம்பும் தும்பும் இல்லே நீ பாரு.. அந்த “இல்லே நீ பாரு”ங்கிறத அவ்வளவு அசால்டா குட்டி சங்கதியால குதூகலப்படுத்தி இருப்பாங்க. அந்தியிலே வானம் பாடலில் கடைசி பல்லவியில் :ஓடும் காவிரி இவள் தான் உன் காதலி குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்” வரிகளில் காதலி, தேடி, கொஞ்ச துடிக்கும், ஹோய்ய்ய் வரிகளில் வார்த்தைக்கு வார்த்தை அற்புதமான குட்டி சங்கதிகளை கொட்டி குதூகலிச்சிட்டு திரும்ப மனோ அந்தியில வானம் அப்படீங்கும் போது “ஹா” அடுத்த வரியின் முடிவில் “ஆஹாஹா”னு குரல்ல ஒரு ஸ்பரிசத்த கொடுத்து நம்ம மனச அலை பாய வெச்சிருவாப்படி...

சின்னஞ்சிறு கிளியே – மெல்லிசை மன்னர்
போறாளே பொன்னு தாயி  – ஏ.ஆர்.ரஹ்மான்
பூவாட்டம் காயாட்டம் கன்னி தோட்டம் – யுவன்
கண் இமைக்காமல் உனை – லஷ்மிகாந்த் பியாரிலால்
எனக்கும் உனக்கும் எக்கச்சக்க – வித்யாசாகர்
சின்ன சின்ன சேதி சொல்லி வந்ததிந்த- தேவா
ராக்கம்மா ராக்கம்மா – கார்த்திக் ராஜா
ஏ சம்பா நாத்து சறுகாச்சு மச்சான் – சவுந்தர்யன்
புது ரோஜா பூத்திருச்சு – சிற்பி
அருவி ஒன்னு குதிக்குது வந்து – ஆதித்யன்

என்னுள்ளே என்னுள்ளே, ஆட்டமா தேரோட்டமா, ஊரெல்லாம் உன் பாட்டு தான், நன்றி சொல்லவே உனக்கு, சொல்லிவிடு வெள்ளி நிலவே, ஒனப்பு தட்டு புண்ணாக்கு, காட்டு குயில் பாட்டு சொல்ல, மல்லிகை மொட்டு மனச தொட்டு, ஒரு போக்கிரி ராத்திரி, ஆறடி சுவறு தான், வெண்ணிலவு கொதிப்பதென்ன, வெடல புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள.... இப்படி இசைஞானியின் இசையில் பாடல்களை சொல்லிகிட்டே போலாம்...

70 எபிசோட தாண்டி எழுதீட்டிருந்தாலும் பத்தாது... எவ்வளவு பாட்டு பாடி இருந்தாலும் “நெஞ்சமே பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது... மாலையில் யாரோ மனதோடு பேச...” இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் நம்மை ஆசுவாசப்படுத்தி நம் மனதோடு இனிமையாக பேசி விட்டே செல்கிறார் சுவர்ணலதா என்னும் ஹம்மிங் குயின்!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.