பதின்மத்தின் இறுதியில் உடலின்பால் கொண்ட ஈர்ப்பும் உடலின்பத்தை நுகர்வதில் உள்ள ஆர்வமும் மிகத் தீவிரமாக இருக்கும், அதனைக் கையாளுதலோ புறந்தள்ளுதலோ நடவாத காரியம், யாரை வேண்டுமானாலும் ஏமாற்றத் துணிகின்ற வேட்கை. தன்னைக் கட்டுப்படுத்துபவர்கள் அனைவரையும் எதிரியாகவே பாவிக்கும். பதின்ம நாயகிக்கு அவள் அம்மாவின் மீது அப்படி ஒரு எதிர்பிம்பம் இருக்கிறது, உடன் படிக்கின்ற ஒரு மாணவன் மீது ஈர்ப்பும் அவனோடு சேர்ந்து இந்தக காமத்தைக் கற்றுக்கொண்டு அதன்மூலமாக அவள் கண்டடைகின்ற மனவிரிவும், அம்மாவின் மீதான எதிர்பிம்ப மாறுதலும், ஆண்கள் உலகைப் பற்றிய புரிதலுமே கதை.
நீ என் வீட்டில் இலகுவாக வந்து போகவேண்டும் என்றால் என் அம்மாவுக்குப் பிரியமான ஒருவனாக இருக்கவேண்டும் என்று அம்மாவுக்கு எப்படி நடந்துகொண்டால் பிடிக்கும் என்று இவளே கற்பிக்கவும் செய்வாள், பின் அம்மாவிடம் இவன் நெருக்கமாகப் பழகுவதைப் பார்த்து பொறாமையும் கொள்வாள்.
முதல் முத்தம், முதல் தொடுகை, என பழக்கம் அதன் எல்லையை விஸ்தரித்து முதன் முதலாக அவன் அவளுக்கு சுயமைதுனம் செய்துவிடுகையில் அவள் முகம் இன்பத்திற்கு பதிலாக அதிருப்தியைக் காட்டும், நீ ஏன் அதிருப்தியாக இருக்கிறாய்? நான் ஏதும் `தவறாகச் செய்கிறேனா? "இல்லை நீ மிகச் சரியாகச் செய்கிறாய். அதுதான் எனக்குக் குழப்பத்தைத் தருகிறது, எனக்கே தெரியாத பலவும் நீ என்னுடலைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறாய். ஆனால் நேற்று என்னோடு சேர்ந்து இதனை இணையத்தில் கற்றுக்கொள்ளும் போது எதுவுமே தெரியாதவன் போல இருந்தாய், எதற்கிந்த நடிப்பு?" என்பாள். மிகக் கூர்மையான ஒரு பெண்மனம். அங்குதான் அவளுக்கு விழிக்கும்.
மிகவும் கண்டிப்பான ஆசிரியை ஒருவரிடம் பள்ளியின் மேல்மாடி சாவி இருக்கிறது, அவர் அத்தனை எளிதாக எவரிடமும் அதனைத் தரமாட்டார். அந்தச் சாவியை வாங்கி வருகிறேன் நாம் தனியாக இருக்கலாம் என்பான், அதெப்படி உன்னால் முடியும்? யாருக்குமே அவர் தரமாட்டார், என நாயகி சொன்னதும், இவன் ஆசிரியையிடம் சென்று கேட்டு சாவியை வாங்கி வந்துவிடுவான். எப்படி உனக்கு மட்டும் சாவியைத் தந்தார்? "மனிதர்களுக்கு எது தேவையோ அதைக் கொடுப்பதன் மூலமாக நாம் நினைத்ததைச் சாதிக்கலாம், மொட்டைமாடியில் தொலைநோக்கி மூலமாக நட்சத்திரங்களை மாணவர்களுக்கு காண்பிக்கப் ஆசைப்படுகிறேன் என்றேன் சாவியைத் தந்துவிட்டார்.
கற்றுக்கொடுப்பவர்களின் பலவீனம் அது" - சரி என் அம்மாவின் பலவீனம் எது? "உன் அம்மா அவரின் வேலைகளுக்கு அவரின் அன்புக்கு ஒருவித அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறார், அதனை அவருக்குத் தந்தேன், அவருக்கு என்னைப் பிடித்துவிட்டது,. வீட்டிற்குள் அனுமதிக்கிறார், உன்னருகில் இருக்க எனக்கு அது வசதியாகப் போய்விட்டது. அது நம் நல்லதுக்காகத் தானே!" -அம்மா ஏன் இவனோடு நெருக்கமாப் பழகுகிறாள் என்பதற்கான காரணம் அவளுக்குப் அப்போதுதான் புலப்படும்.
சரி, எனக்கு என்ன பலவீனம்? என்பாள்.
நுட்பமான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது படம்.