திரையுலகில் 40 வருடத்தை பூர்த்தி செய்திருக்கிறார் சிம்பு. இளம் நடிகர்களில் இந்த சாதனையை செய்தவர் இவர் மட்டும் தான்.
குழந்தை நட்சத்திரம் தொடங்கி இளம் கதாநாயகன், பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என திரையுலகில் தன் திறமையை நிரூபித்தவர்.
நாற்பது ஆண்டு கால பயணத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்த சிலம்பரசன் தன் ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பதில் மட்டும் பின் தங்கவில்லை.
* 1984-ல் "உறவை காத்த கிளி" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்
* 1989-ல் "சம்சார சங்கீதம்" படத்தில் 'I am A Little Star' என்ற பாடலில் பாடகராக அறிமுகம்.
* 2002-ல் "காதல் அழிவதில்லை" படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம்.
*2003-ல் "தம்" படத்தில் வரும் 'அட்ரா அட்ரா தம்' பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம்.
* 2004-ல் "மன்மதன்" படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகம்.
* 2006 -ல் வெளியான "வல்லவன்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம்.
இதுபோக திரையுலகில் நட்புக்காக கவுரவ வேடத்தில் நடிப்பதிலும் பலருக்கு உதவியிருக்கிறார். " காதல் வைரஸ், கோவா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்ன சொல்லுது, காக்கா முட்டை, காற்றின் மொழி, 90 ml, மகா என ஏராளமான படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து அப்படத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருக்கிறார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து "Thug Life" படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
நன்றி: வண்ணத்திரை