Breaking News :

Friday, May 03
.

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஷிவானி


சின்னத்திரையில் பிக் ஸ்டாராக வலம் வந்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் மீண்டும் சீரியல் பக்கம் திரும்பாமல் படங்களில் நடிப்பதை முழு கவனம் செலுத்தி வருகிறார் . லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதியின் மூன்று ஜோடிகளில் ஒருவராக ஷிவானி  இருக்கிறார்.மேலும் பொன்ராம் இயக்கும் விஜய் சேதுபதியின் படத்தில் போலீஸ் ரோல் ஒன்றில் நடிக்கும் இவர் இப்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் கமிட் ஆகி இருக்கார். 

இது குறிச்சு ஷிவானி, ‘இவ்வளவு நாட்கள் வடிவேலு அவர்களின் மீம்ஸ் ட்ரோல் படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போது அவருடனே திரையில் ஒன்றாக நடிக்க இருக்கிறேன். ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திற்காக லைகா நிறுவன தயாரிப்பில் வடிவேலு சாருடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி’ என வடிவேலுவுடன் இருக்கும்படியான புகைப்படத்தை ஷிவானி பகிர்ந்துள்ளார். 

இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி யாரும் இல்லை என சொல்லப்படும் நிலையில் ஷிவானியின் கதாப்பாத்திரம் குறித்து எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறாய்ங்க.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.