Breaking News :

Wednesday, November 06
.

அரவிந்த் சாமியை கட்டிப் பிடித்த காட்சி - சீரியல் நடிகை நெகிழ்ச்சி


மெய்யழகன் படத்தில் நடிகர் அரவிந்த்சாமியைக் கட்டிப் பிடிக்கும் காட்சியில் நடிக்கும்போது, தான் பதற்றமானதாகவும் அப்போது அவர் பதற்றமில்லாமல் நடிக்க உதவி செய்ததாக மூன்று முடிச்சு சீரியல் நடிகை சுவாதி கொண்டே கூறியுள்ளார்.

மெய்யழகன் படத்தில் நடிகர் அரவிந்த்சாமியைக் கட்டிப் பிடிக்கும் காட்சியில் நடிக்கும்போது, தான் பதற்றமானதாகவும் அப்போது அவர் பதற்றமில்லாமல் நடிக்க உதவி செய்ததாக மூன்று முடிச்சு சீரியல் நடிகை சுவாதி கொண்டே கூறியுள்ளார்.

96 பட புகழ் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி - அரவிந்த்சாமி நடித்துள்ள் மெய்யழகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. கத்தி, ரத்தம், துப்பாக்கி சண்டை இல்லாமல், உறவுகளின் மேன்மையை சொல்லும் படமாக மெய்யழகன் படம் அமைந்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் நடிகை சுவாதி கொண்டே மெய்யழகன் படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெய்யழகன் படத்தில் நடிக்கும்போது, சூட்டிங் ஸ்பாட்டில் அரவிந்த் சாமியை கட்டிப்பிடிக்கும் காட்சியில் தான் பதற்றம் அடைந்ததாகவும் அப்போது அவர் பதற்றமில்லாமல் நடிக்க உதவி செய்த விதம் குறித்து சுவாதி கொண்டே கூறியுள்ளார்.

சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்கள், பின்னாளில் சீரியலில் நடிக்க வந்துகொண்டிருந்த நிலையில், இப்போது, ஒரு சில நடிகைகள் சீரியலில் அறிமுகமாகி திரைப்படங்களிலும் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரலமான நடிகை சுவாதி கொண்டே, தற்போது சன் டிவியில் மூன்று முடிச்சு என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மெய்யழகன் திரைப்படத்தில் கார்த்தி மற்று அரவிந்த்சாமி உடன் நடித்த அனுபவத்தை சுவாதி கொண்டே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

சுவாதி கொண்டே கூறுகையில், “நானும் அரவிந்த் சுவாமியும் நடித்த காட்சிகள் திரையில் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.  நான் சின்ன வயசிலிருந்து அரவிந்த்சாமியின் ரசிகை ஆனால், அவரை சூட்டிங் ஸ்பாட்டில் பக்கத்தில் பார்த்த போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.” என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், அரவிந்த்சாமி குறித்து பேசிய சுவாதி கொண்டே, “அவர் ரொம்பவே கலராக இருந்தார். அவருடைய கலரை பார்த்து நான் பிரமித்து போய்விட்டேன். இப்படி இருப்பாங்களா? என்று நினைத்தேன். அதற்கு பிறகு அவரோடு காட்சிகள் வந்தது. அவரை நான் கட்டிபிடிப்பது போன்ற காட்சிகள் இருந்தது. ஆனால், என்னால் அவரை கட்டிப்பிடிக்க முடியவில்லை. நான் பதட்டத்தோடு இருந்ததை பார்த்து அரவிந்த்சாமி என்னிடம் இயல்பாக இருங்கள். இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுத்தார். எனக்கு அது சந்தோஷமாக இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அப்போது சீரியலில் நம்மோடு நடிப்பவர்கள் நமக்கு ஒரு கம்ஃபர்ட் கொடுப்பது போல தான் அரவிந்த்சாமி எனக்கு கொடுத்தார். அவரை இதற்கு முன்பு நான் பார்த்ததுகூட கிடையாது. ஆனால், ஏதோ பல வருடம் பந்தம் இருப்பது போல அவர் நடந்து கொண்டார். அவரைப் பார்த்தபோது என் மனதிற்குள் இருந்த சந்தோஷத்தை சொல்லுவதற்கு வார்த்தையே இல்லை” என்று சுவாதி கொண்டே கூறியுள்ளார்.

நடிகர் அரவிந்த்சாமி உடன் நடித்தது குறித்து மூன்று முடிச்சு சீரியல் நடிகை சுவாதி கொண்டே பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.