Breaking News :

Saturday, April 19
.

'சாணி' திரைப்படத்தின் பூஜை!


14 ஏப்ரல் 2025, டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது.

மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்கும் மற்றும் மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் “சாணி” என்ற திரைப்படத்தின் பூஜை, அந்த கிராமத்தில் அமைந்துள்ள CSI பெண்கள் தொடக்கப் பள்ளியில் கல்வித் தலைவர்களாகிய டாக்டர்.அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர்.முத்துலட்சுமி, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் A.P.J.அப்துல்கலாம் இவர்களின் புகைப்படங்களை முன்னணியாக வைத்து மிகுந்த மரியாதையுடன் படத்துவக்கவிழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நேரில் கலந்துகொண்டனர்.
 மேலும், அனைத்து மாணவிகளுக்கும் இனிப்புகள், நோட்டு புத்தகம், பேனா மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டு, சமூகக் கட்டுப்பாட்டுடன் கல்விக்கும் கலைக்கும் இடையே பாலம் அமைக்கும் முயற்சியாக இந்த நிகழ்வு அமைந்தது.

இயக்குநர் சி. மோகன்ராஜ்,  தான் இன்றும் இன்னிலைக்கு வர முதல் காரணம் கல்வி மட்டுமே. கல்வி இல்லையெனில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னால்  எழுதவோ, படிக்கவோ, சிந்திக்கவோ சாத்தியமில்லை என்பதனால் தனது முதல் படத்தை பள்ளியில் கல்விக்காக போராடிய தலைவர்களின்  முன்னிலையில் மாணவ மாணவிகளின் ஆசீர்வாதத்துடன் திரைப்பட பயணத்தை தொடங்கவேண்டும் என்ற எனது பல நாள் கனவு இன்று நிறைவடைந்தது.

இதற்கு உருதுனையாக இருந்த தயாரிப்பாளர் மற்றும் இந்த கதையின் கதாநாயகனுமாகிய என் அண்ணன் மருது பாண்டியன் அவர்களுக்கும் மற்றும் இந்த நிகழ்ச்சியை பள்ளியில் நடந்த அனுமதி தந்த பள்ளியின் முதல்வர்,மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது .

கலையின் ஒரு வடிவம் தான் சினிமா, நல்ல திரைப்படங்கள்  மாணவர்களுக்கு பாடமாகக்கூட அமைந்திருக்கின்றன.

பள்ளிக்கூடத்தில் ஒரு திரைப்படத்தின் துவக்கவிழாவை துவங்கியிருப்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம் இந்த திரைப்படம் எதை பேசவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில், பள்ளி வளாகத்தில் மாணவிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் படத்துவக்கவிழா வரலாற்றில் எங்களுக்கு  மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகும். என்றார். செங்கல்பட்டு காஞ்சிபுரம் திண்டிவனம் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.