Breaking News :

Friday, May 03
.

ஓடிடி தளத்தில் ’லியோ’ வெளியீடு


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’ இதில், விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும், அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரபட்டாளமே நடித்திருந்தனர். 

கடந்த அக்டோபர் 19-ம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியாகி, ரசிகர்களின் கலவையான விமர்சனங்கலை குவித்தது.  ‘லியோ’ திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமா வரலாற்று சாதனை படைத்தது இப்படம். 
இந்நிலையில், தற்போது இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.