Breaking News :

Friday, November 08
.

வடிவேலு படங்களில் நடித்த ரெங்கம்மாள் பாட்டி காலமானார்


நடிகை ரெங்கம்மாள் பாட்டி என்றால் திரைத்திரையில் தெரியாதவர்களே இல்லை. அந்த அளவிற்கு இந்தப் பாட்டி புகழ்பெற்றவர். இவர் நடிகர் வடிவேலுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக வறுமையில் தவித்து வந்த ரெங்கம்மாள் பாட்டி காலமானார்.

இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் ஆகும். சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து சினிமாவிற்கு வந்தார். இவர் எம்.ஜி.ஆர் நடித்த விவசாயி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அந்த காலகட்டத்தில் இருந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களிலும் குண சித்திரம், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் அடைந்தவர்.

தனது நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த ரெங்கம்மாள் பாட்டி, சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வறுமையில் தவிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், அன்னூரில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.