Breaking News :

Wednesday, October 16
.

'வேட்டையன்' முதல் பாடல் வெளியானது


லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படமான 'வேட்டையன்' படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலானது வெளியாகியுள்ளது.

மேலும் இது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. "மனசிலாயோ" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், ஆற்றல்மிக்க தாளங்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளின்  கலவையாக மட்டுமல்லாமல், இது படத்தின் கருப்பொருள்களான வலிமை, உறுதிநிலை மற்றும் அதிரடியான காட்சிகள் ஆகியவற்றின் சாரத்தை முழுமையாகப் படம் பிடிக்கிறது.

சமகால மற்றும் பாரம்பரிய தமிழ் மற்றும் மலையாள இசையில் வேரூன்றிய ஒரு இசையமைப்பை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத், மேலும் இது இளைய தலைமுறை மற்றும் பாரம்பரிய இசை பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமைகிறது. இந்தப் பாடலானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகழ்பெற்ற பாடகர் 'மலேசியா' வாசுதேவனின் சக்திவாய்ந்த குரலால் உருவாக்கப் பட்டுள்ளது.

மேலும் அவரது குரலுடன் யுகேந்திரன் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோரின் குரல்கள் 'சூப்பர்' சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் ஆகியோரது வரிகளுக்கு உயிரூட்டியுள்ளது.
இந்த முதல் பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகி ஏற்கனவே நேர்மறையான ஆதரவை பெற்றுள்ளது, ரசிகர்கள் பாடலின் உற்சாகமூட்டும் தாளத்தையும் கலைஞர்களின் கிளர்ச்சியூட்டும் பாட்டு திறனையும் பாராட்டியுள்ளனர். வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்த பாடல் தரவரிசையில் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு தளங்களில் பிரபலமடைந்து வருகிறது.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 'வேட்டையன்' அதிரடியான காட்சிகள் நிறைந்த சமூகக் கருத்துள்ள திரைப்படம் ஆகும்.

மேலும் தனித்துவமான ஒலிக்கலவையானது உயர்தரமான அதிரடி காட்சிகள், உணர்ச்சிமிக்க மற்றும் பிரம்மிக்க வைக்கும் காட்சிகளின் தொகுப்பை வழங்கவுள்ளதாக படம் உறுதியளிக்கிறது. இத்திரைப்படத்தில் பிரமிப்பூட்டும் வகையில் பாலிவுட் 'மெகா ஸ்டார்' அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன், ரோகிணி மற்றும் அபிராமி உள்ளிட்ட  நட்சத்திர பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அக்டோபர் 10,2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின்  எதிர்பார்ப்பை இந்த முதல் பாடல் அதிகரிக்கும் என்று 'வேட்டையன்' குழு  நம்புகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள இத்திரைப்படம் பான்-இந்தியா சினிமா அனுபவத்தை அளிக்கும் என படக்குழு உறுதியளிக்கிறது.

நடிகர்கள்
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன்,மஞ்சு வாரியர்,ஃபஹத் பாசில்,ராணா டகுபதி,ரோகிணி,அபிராமி,ரித்திகா சிங்,துஷாரா விஜயன்

படக்குழு
தயாரிப்பு நிறுவனம் : லைகா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : சுபாஸ்கரன்
நிர்வாகத் தலைமை(லைகா புரொடக்ஷன்ஸ்) : ஜி கே எம் தமிழ்குமரன்

இயக்கம் :  த.செ.ஞானவேல்
இசை :  அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு : எஸ். ஆர். கதிர்
படத்தொகுப்பு : பிலோமின் ராஜ்
கலை இயக்கம் : கே. கதிர்
சண்டைப் பயிற்சி : அன்பறிவ்
நடன இயக்கம் : தினேஷ்
கிரியேட்டிவ் இயக்குனர் : பி கிருத்திகா
ஒப்பனை: பானு, பட்டணம் ரஷீத்
ஆடை வடிவமைப்பு : அனு வர்தன், தினேஷ் மனோகரன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.