Breaking News :

Sunday, September 08
.

எம்ஜிஆர் நினைவு தினம்: மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.. சிறப்பு பகிர்வு


"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது 

முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் 

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்அந்த 

ஊருக்குள் எனக்கொரு பெயர் இருக்கும்''""

-

 என்ற பாடலுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 

36 வது நினைவு நாளாகும் 

-

மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்ட இந்த சந்திரன், பின்னாளில் எம்ஜிஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அது தவிர மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், வாத்தியார் என்ற பட்டங்களும் உண்டு.

 

வரலாற்றில் சாதனைகள் பல படைத்த இவர், காலத்தை வென்ற தலைவர்.'மக்கள் திலகம்' என புகழப்பட்ட, இராமச்சந்திரன் அவர்கள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார்.

 

சிறுவயதில், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார்.

 

நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி பிரபலமான நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்ஜிஆர் சிறந்த திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குநராவார் கூட இருந்திருக்கிறார்.

 

அமெரிக்க இயக்குநர் எல்லீஸ் டங்கன் 1935ல் முதன்முதலில் தமிழில் இயக்கிய சதிலீலாவதி என்ற படத்தில்தான் எம்ஜிஆர் முதன் முதலில் அறிமுகமானார்.

 

1947ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படம்தான் எம்ஜிஆருக்கு மிகம்பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது.

ரிக் ஷாக்காரன் திரைப்படம் எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுத் தந்தது.

எம்.ஜி.ஆரே தயாரித்து இயக்கிய முதல் படம் நடோ டி மன்னன் இந்த படம் 1956ம் ஆண்டு வெளியானது.

 

காவல்காரன் திரைப்படம் . இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

 

அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., 

 

1987  ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24  ந்தேதி மறைந்தார் .

 

ஒரு யுக புருசனாக வாழ்ந்து கோடானு கோடி மக்களின் அன்புக்குரியவராக இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

-

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

1960 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும் இந்தியில் அதன் வாசகங்கள் இருந்ததால் ஏற்க மறுத்துவிட்டார்.

 

1972 ஆம் ஆண்டு ரிக்ஷாகாரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது.

 

1987 ஆம் ஆண்டு மரணத்துக்கு பிந்தைய பாரத ரத்னா விருது.

 

சென்னை பல்கலை மற்றும் அரிசோனா உலகப் பல்கலையின் டாக்டர் பட்டம்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.