Breaking News :

Tuesday, December 03
.

ஜப்பானில் வெளியாகிறது பிரபாஸின் 'கல்கி 2898 கிபி'!


பிரபாஸின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சயின்ஸ் ஃபிக்சன் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமான 'கல்கி 2898 கிபி' எனும் திரைப்படம்- ஷோகாட்சுக்கான நேரத்தில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று இந்த பிரபஞ்சத்தின் ஆரவாரத்துடன் ஜப்பானில் வெளியாகிறது. இந்த புத்தாண்டு வெளியீட்டை.. பிரபல தொழிலதிபர் கபாடா கெய்சோவின் ' ட்வின்' எனும் நிறுவன மூலம் வெளியிடப்படுகிறது. இது 'கல்கி 2898 கிபி'  படத்தின் உலகளாவிய பயணத்தின் மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது.

வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் வெளியான 'கல்கி 2898 கிபி' எனும் திரைப்படம் உலக அளவில் வசூலில் நட்சத்திர அந்தஸ்தை எட்டியது. இந்தத் திரைப்படம் உலக அளவில் 1,200 கோடிக்கு மேல் வசூலித்ததுடன், இந்தி பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கு மேல் வசூலித்து, 2024 ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படமாக சாதனை படைத்தது.

டிஸ்டோபியன் பிரபஞ்ச மோதல் மற்றும் காலநிலை பேரழிவின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில்...  கணிப்புகள் மற்றும் பண்டைய ரகசியங்களுக்கு மத்தியில்.. பைரவா ( பிரபாஸ்) எனும் வலிமைமிக்க போர் வீரனின் கதாபாத்திரம்...

அஸ்வத்தாமாவின் கதாபாத்திர சித்தரிப்பு.. இந்திய காவியமான மகாபாரதம் முதல் அழியாத உயிரினம்.. புராண பிரம்மாண்டத்தை எதிர்கால நிகழ்வுகளுடன் காட்சியாக இணைக்கும்  ஒரு விவரிப்பு... ஆகியவற்றை கொண்டிருக்கிறது. இதில் சுமதியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். அவர் பிறக்காத கல்கியின் அவதாரத்தை கருவில் சுமந்து இருக்கிறார். மாற்றத்தின் முன்னோடியான கமல்ஹாசன் - ஒரு இரக்கமற்ற வில்லனாக கல்கியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்.

எதிர்கால போர்கள் மற்றும் பிற உலக தொழில்நுட்பம் சார்ந்த புராண தேடல்கள் ஆகியவற்றுடன் 'கல்கி 2898 கிபி' உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் மட்டுமல்ல.. பழங்கால மற்றும் நவீன கால உலகங்களின் காவிய கதை சொல்லலை எதிரொலிக்கும் படைப்பு மட்டுமல்ல..

உலகளாவிய பார்வையாளர்களுக்கான பொருத்தமான படைப்பும் கூட. புராணங்களும், எதிர்காலமும் அழகாக இணைந்திருக்கும் நாடான ஜப்பான் இந்த பரபரப்பான கதைக்கு முதன்மையானது.  பிரபாஸ் ஜப்பானிய பார்வையாளர்களிடம் பெரும் புகழை பெற்றிருக்கிறார். அவர்களில் பலர் 'கல்கி 2898 கிபி' படத்தை காண இந்தியாவிற்கு நேரில் வருகை தந்திருந்தனர். விதியின் மகத்தான அலைகளை எதிர்கொள்ளும் ஒரு ஹீரோவாக அவரது சித்தரிப்பு இந்த படத்தில் இடம்பெற்றது.

'கல்கி 2898 கிபி' ஜப்பானில் வெளியாக தயாராகி வருவதால்.. பார்வையாளர்கள் உண்மையிலேயே இந்த உலகத்திற்கு வெளியே செல்லும் அனுபவத்தை எதிர்பார்க்கலாம். இது இந்திய புராணங்களின் செழுமையை  காட்சிப்படுத்தி இருக்கிறது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவான 'கல்கி 2898 கிபி' திரைப்படம் - ஜப்பானில் 2025 ஜனவரி 3 ஆம் தேதியன்று வெளியாகிறது.  இந்த சினிமா தலைசிறந்த புராணத்திற்கான கருப்பொருள்களுடனும்... எதிர்காலத்திற்கான கருப்பொருள்களையும் ஒன்றிணைத்து பார்வையாளர்களுக்கு வித்தியாசமான பிரமிப்பூட்டும் அனுபவத்தையும், உணர்வுபூர்வமான தருணங்களையும்  வழங்குகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.