Breaking News :

Sunday, October 06
.

பையா ரீ ரிலீஸ்: அற்புதமான நினைவுகள்: நடிகை தமன்னா


பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த சில படங்கள் தற்போதைய இளைஞர்களும் பார்த்து ரசித்து அதே அனுபவத்தை பெரும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி கடந்த 14 வருடங்களுக்கு முன்பு வெளியாகி இளைஞர்களை கிறங்கடித்த ‘பையா’ திரைப்படமும் படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரீலீஸ் ஆகிறது.

 

இயக்குநர் லிங்குசாமி டைரக்ஷனில், கார்த்தி, தமன்னா நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த படம் காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்சன், பாடல்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக நடிகை தமன்னாவுக்கு இந்த படம் தான் தமிழ் சினிமாவில் முதல் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு தற்போது வரை தமன்னாவின் திரையுலக பயணம் ஏறுமுகத்திலேயே சென்று கொண்டிருக்கிறது என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த நிலையில் ‘பையா’ படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மீண்டும் ரீலீஸ் செய்யப்படுவதை அடுத்து நடிகர் கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்தார்   டைரக்டர் என்.லிங்குசாமி.

 

“பையா எப்ப பாத்தாலும் அது புதுசாக தான் இருக்கும். 

 

இன்னொரு ஸ்பெஷலிட்டி.. படத்த எந்த பகுதியிலிருந்தும் பாக்கலாம்.. குழப்பமே இல்லாத திரைக்கதைன்னு என் நண்பர்கள் எப்பவுமே  சொல்லுவாங்க.. படத்தில் கார் டிராவலாகட்டும்.. சின்ன சின்ன சுவாரசியமான காதல் காட்சிகளாகட்டும்.. கலர் கலரான டிரசாகட்டும்.. யுவனின் பாட்டுகள்..

 

 மதியின் அசத்தலான ஒளிப்பதிவாகட்டும்.. படபிடிப்பில் என் கூடவே இருந்த வசனகர்த்தா பிருந்தா சாரதியாகட்டும், மக்கள் கொண்டாடிய தமன்னாவாகட்டும்.. எல்லாமே ஒரு சுகமான அனுபவம். அதன் பிறகு தியேட்டரில் ரசிகர்கள் குடும்ப குடும்பமாக கொண்டாடியதாகட்டும்.. !” 

இப்படி பல விஷயங்களை கார்த்தி சொல்ல..

 

#பையா பட அனுபவங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

இதே போல் பையா குறித்து உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை தமன்னா. இது குறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறும்போது,

“14 வருடங்களுக்குப் பிறகும் கூட ‘பையா’ படத்தின் மீதான அன்பு இப்போதும் குறையாமல் பலமாக இருப்பதை பார்ப்பதே சிறப்பான உணர்வை தருகிறது. இந்த காலகட்டத்தில் கூட இந்த படத்திற்கு கிடைத்து வரும் பாசத்தையும் அன்பையும் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமாக உணர்கிறேன். என் மனம் உற்சாகத்தால் நிரம்பியுள்ளது. மீண்டும் பெரிய திரையில் ‘பையா’ படத்தின் மேஜிக்கை உங்கள் அனைவருடனும் சேர்ந்து அனுபவிப்பதற்காக என்னால் காத்திருக்க முடியாது. இயக்குநர் லிங்குசாமி சார், கார்த்தி, யுவன் சங்கர் ராஜா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் இப்படி அற்புதமான நினைவுகளை கொடுத்ததற்காக முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தமன்னா.

 

பையாவில் இசை சாம்ராஜ்யம் நடத்திய இசை இளவல் யுவன் சங்கர் ராஜா குறிப்பிடும் போது, 

 வரும் 11ம் தேதி மீண்டும் அந்த அழகிய மேஜிக்கல் லவ் ஸ்டோரியை சில்வர் ஸ்கிரீனில் பார்க்க ஆர்வமாக உள்ளது என்று கூறியிள்ளார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.