Breaking News :

Friday, May 03
.

இணைந்த கைகள் ஜோடி நிரோஷா ராம்கி


இணைந்த கைகள் மூலம் இணைந்த

இரு  உள்ளங்கள்  வாழ்க்கையிலும்

ஜோடி சேர்ந்த நிரோஷா மற்றும் ராம்கி

 

நடிகை நிரோஷா ஜனவரி 23ஆம் தேதி 1971 ஆம் ஆண்டு பிறந்தார்.

 

இவருடைய தகப்பனார் எம். ஆர். ராதா ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ராதிகா, மோகன் ராதா ஆகியோர்.

 

இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் ராதா ரவி.

 

இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.

 

நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார்.

 

நிரோஷாவின் அப்பா எம்.ஆர் ராதா ஒரு மிகப்பெரிய நடிகர் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடன் தாலி பெண்ணுக்கு வேலி எனும் திரைப்படத்தில் நிரோஷா மூன்று வயதிலே எம்.ஆர் ராதாவின் மகளாகவே நடித்திருக்கிறாராம்.

 

நடிப்பில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கெட்டிக்காரியாராக  நிரோஷா இருந்துள்ளார்.

 

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அக்னி நட்சத்திரம்.

 

இப்படத்தில் நடித்த பல கதாபாத்திரங்களுக்கு இதுவே மைல்கல்லாக அமைந்தது.

 

வெற்றியின் உச்சத்தைத் தொட்ட இந்த திரைப்படத்தில் மாடல் பெண்ணாக அறிமுகமானவர்தான் நடிகை நிரோஷா.

 

அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

 

இலங்கையில் பிறந்த இவர் பழம்பெரும் நடிகர் எம்.ஆர் ராதாவின் மகள். நடிகை ராதிகா சரத்குமார் தங்கை ஆவார்.

 

தனது இரண்டாவது படமான செந்தூரப்பூவே அப்படியே கிராமத்துப் பெண்ணாக மாறி தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

 

இந்த படத்தில் நடிகர் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

 

இந்த ஜோடி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அந்த வரவேற்பு நிஜ வாழ்க்கையிலும் உண்மையானது.

 

நடிகர் ராம்கி திருமணம் செய்து கொண்டார் நிரோஷா.

 

பல படங்களில் கதாநாயகியாகச் சொல்லித்தந்த நிரோஷா. 

 

இணைந்த கைகள் என்ற திரைப்படத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் தனது உச்சக்கட்ட நடிப்பை  வெளிப்படுத்தி இருப்பார்.

 

இதைப் பார்த்த ரசிகர்கள் கண் கலங்காமல் இருக்கவே முடியாது.

 

அந்த அளவிற்குத் தனது நடிப்பைச் சீராக மக்களிடம் கொண்டு சேர்த்து இருப்பார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.