Breaking News :

Sunday, October 06
.

நினைவலைகள்: மகா கலைஞன் இயக்குநர் மணிவண்ணன்!


'அமைதிப்படை' அமாவாசைன்னா இன்னைக்கு வரை சத்யராஜ் பெயர்தான் எல்லோர் நினைவுக்கும் வரும். ஆனா, அதுக்கு பின்னால முன்னால பக்கத்திலன்னு எல்லா பக்கமும் இருந்த ஒரே ஆளு மணிவண்ணன் தான். ரெண்டு பேருமே ஆரம்ப கால நண்பர்கள்.

1979ல் பாரதிராஜாகிட்ட கதாசிரியரா, அசிஸ்டண்ட் இயக்குநரா உதவியாளரா சேர்ந்து 'அலைகள் ஓய்வதில்லை' மாதிரி சில படங்கள் எல்லாம் பண்ணிட்டு முதன் முதலா 1982ல் மணி வண்ணன் தனியா இயக்கிய படம் 'கோபுரங்கள் சாய்வதில்லை'. மோகன், சுகாசினி, ராதா நடிச்ச அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

அதுக்கு அப்புறம் 'இளமை காலங்கள்', 'நூறாவது நாள்', '24 மணி நேரம்', 'விடிஞ்சா கல்யாணம்', 'சின்னத் தம்பி பெரிய தம்பி', 'முதல் வசந்தம்', 'பாலைவன ரோஜாக்கள்', 'ஜல்லிக்கட்டு', 'கனம் கோர்ட்டார் அவர்களே', 'முதல் வசந்தம்', 'புது மனிதன்,' 'தெற்கு தெரு மச்சான்'-ன்னு மணிவண்ணன் இயக்குன படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்.
மொத்தம் 50 படங்கள் அவரது இயக்கம். அதில் சரி பாதி அவரது நண்பர் சத்யராஜ் நடிச்சது. 1982ல் ஆரம்பிச்சி 'அமைதிப் படை', 'நாகராஜ சோழன் எம்.ஏ. வரை 2013 வரை முப்பது வருஷத்துக்கு மேல படங்களை இயக்கியவர் மணிவண்ணன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் இயக்கி இருக்கிறார்.

ஆரம்பத்திலருந்தே 'கல்லுக்குள் ஈரம்', 'நிழல்கள்' மாதிரி சில படங்கள்ல குட்டி குட்டி வேஷத்தில மணிவண்ணன் நடிச்சிருக்காரு. ஆனா முழு நீள வில்லனா பெரிய கேரக்டரில அவர் நடிச்ச படம் 'கொடி பறக்குது'. அதில் ரஜினிக்கு வில்லன். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அந்த படத்தில மணிவண்ணனுக்கு டப்பிங் குரல் குடுத்தவர், பாரதிராஜா.

அதுக்கு அப்புறம் இயக்கத்தோட கூடவே நிறைய படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சாரு மணிவண்ணன். அப்பிடி அவர் நடிச்ச படங்களோட மொத்த எண்ணிக்கை 400ஐ தொடும்.

சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, அர்ஜுன், பார்த்திபன், விஜய், அஜித் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடிச்ச பெருமை மணிவண்ணனுக்கு உண்டு.
அப்பா, வில்லன், துணை கதாபாத்திரம்னு எல்லாவற்றிலும் கலந்து கட்டி துவம்சம் பண்ணியவர், மணிவண்ணன். 20 ஆண்டு கால தீவிர நடிப்பு வாழ்க்கையில் ஒரு படத்தில் கூட அவரது நடிப்பு சோடை போனது கிடையாது. அரசியல் நக்கல் நையாண்டி வசனங்களை பேசிய துணிச்சல்காரர்.

அதே நேரத்தில், 'உள்ளத்தை அள்ளித்தா', 'சூரிய வம்சம்', அவ்வை சண்முகி, 'முறைமாமன்' மாதிரி பல படங்களை பார்த்தால் முழு நேர காமெடியன்களுக்கே டஃப் கொடுத்திருப்பார். ரெண்டு முறை தமிழக அரசின் சிறந்த காமெடியன் விருதையும் வாங்கி இருக்கிறார், மணிவண்ணன்.

'கோகுலத்தில் சீதை' மாதிரியான படங்களில் தந்தை வேடத்துக்கு மிக பொருத்தமானவரா அவரை பார்க்கலாம். 'கொடி பறக்குது' மாதிரியே பல படங்கள்ல கொடூரமான வில்லனாவும் மணிவண்ணனை பார்க்கலாம். சத்யராஜ், கவுண்டமணியோடு இவரும் சேர்ந்து விட்டால் அன் லிமிட்டட் லூட்டிக்கு 100 சதவீதம் கேரண்டி.

கதாசிரியர், டைரக்டர்... அப்புறம் நடிகரா பார்த்தால் காமெடியன், வில்லன், குணச்சித்திரம்னு எல்லா விதத்திலயும் தமிழ் சினிமாவ கலக்கின மணிவண்ணனுக்கு பல பாடல்கள்ல நடிக்கிற வாய்ப்பும் உண்டு. அப்பிடி மணிவண்ணன் பாடுற எல்லா பாடல்களிலயும் இசையமைப்பாளர் தேவாவோட குரல் மிக பொருத்தமா இருக்கும் மணிவண்ணனே பாடுற மாதிரி இருக்கும்.

50 பிளஸ் வயதிலேயே, தமிழ் சினிமா இழந்த பல ஜாம்பவான்கள்ல மணிவண்ணனும் ஒருத்தர். 30 வருஷத்துக்கு மேல சினிமாவில இருந்த அவர் 50 பிளஸ் வயசிலேயே மறைந்தது தமிழ் திரையுலகுக்கு பெரிய இழப்பு.

நன்றி: தேன்மொழி

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.