Breaking News :

Sunday, October 06
.

பள்ளி படிப்பைக் கூடத் தாண்டாத இசைப்புயல்!


இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இளமைக் காலங்கள் பற்றி அவரது சகோதரி ஏ.ஆர்.ரஹைனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிரபல மலையாள, தெலுங்கு, தமிழ் இசையமைப்பாளர்களிடம் இசைக் கலைஞராகப் பணியாற்றியவர் தான் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை.

வீட்டிலும் சொந்தமாக சில இசைக்கருவிகளை வாங்கி வைத்திருந்தார். அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த திலீபன் என்கிற ஏ.ஆர்.ரஹ்மான் தந்தையின் இசைக் கருவிகளை இசைத்துக் பழகிக் கொண்டிப்பாராம்.

திடீரென உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமானின் தந்தை காலமாகிவிட குடும்பம் வறுமையில் சிக்கியது. இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு பிள்ளைகளைப் படிக்க வைத்தார் ரகுமானின் தாய். ஒரு கட்டத்திற்கு மேல் அதுவும் பற்றாக்குறையாக அப்போது 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரகுமான் முதன் முதலாக வருமானத்திற்காக இசையமைக்க ஆரம்பிக்கிறார்.

இதுதான் இவரது முதல் வாசிப்பாக இருந்திருக்கிறது. தந்தை வாங்கி வைத்திருந்த இசைக்கருவிகளை வெறி கொண்டு பழகத் தொடங்கினார். குறுகிய காலத்திலேயே இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜா உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களிடம் இசைக் கலைஞராகப் பணியாற்றியிருக்கிறார்.

முதன் முதலாக கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மூலமாக போடப்பட்ட டியூனான புன்னகை மன்னன் தீம் இளையராஜா இசையில் ஏ.ஆர். ரஹ்மானால் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாஃப்ட்வேர் மூலம் டியூன் போடக் கற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு முன்பே ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை இசைக் கருவிகளை அக்குவேர் ஆணிவேராக பிரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் வித்தையைக் கற்று வைத்திருந்தார்.

இதே பழக்கம் இசைப்புயலுக்கும் தொற்றிக் கொள்ள இசைக்கருவிகள் மேல் தீராக்காதல் கொண்டு கண்ணில் பட்ட புதுமையான இசைக்கருவிகளை வாங்கிப் போட்டு அதில் விதவிதமான டியூன்களை உருவாக்கி இசைப்புயலாக உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

ராஜீவ் மேனனின் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மானை ராஜீவ் மேனனே மணிரத்னத்திடம் அறிமுகப்படுத்தி வைக்க அன்று உருவான ரோஜா மூலம் வீசிய இசைப்புயல் இன்று வரை இளசுகளையும், இசைப் பிரியர்களையும் சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.