Breaking News :

Tuesday, November 05
.

எம்.ஜி.ஆர் நடித்த முதல் விண்வெளி படம்!


இந்திய சினிமாவின் முதல் விண்வெளி படம்... பட்டுக்கோட்டையின் மாறுபட்ட பாடல் : எம்.ஜி.ஆரின் இந்த படம் தெரியுமா?

ஆம்ஸ்ராங் 1969-ம் ஆண்டு தான் நிலவில் கால் வைத்தார். ஆனால் அதற்கு முன்பே 1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் முதல் விண்வெளிப்படம் வெளியாகிவிட்டது.

தமிழ் சினிமாவில் முதல் விண்வெளிப்படம் என்று ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தை சொன்னாலும், ஆம்ஸ்ராங் நிலவில் கால் வைக்கும் முன்பே இந்தியாவில், முதல் விண்வெளி படமாக தமிழில் எம்.ஜி.ஆர் நடித்து ஒரு படம் வெளியாகியுள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜெயம் ரவி நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான படம் டிக். டிக். டிக். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கிய இந்த படம் தமிழ் சினிமாவில் முதலில் வெளியான வின்வெளிப்படம் என்று சொல்லப்பட்டது.

ஆனால் அதற்கு முன்பே 1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் முதல் வின்வெளிப்படம் வெளியாகிவிட்டது. ஆம்ஸ்ராங் 1969-ம் ஆண்டு தான் நிலவில் கால் வைத்தார்.

அதே சமயம் விஞ்ஞானம் வளராத அந்த காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் இயக்குனர் ஒருவர், தனது சிந்தனையை வின்வெளி நோக்கி செலுத்தியுள்ளார். அந்த இயக்குனர் தான். ஏ.காசிலிங்கம். கலை அரசி என்ற இந்த படத்தில் எம்.ஜி.ஆர் பானுமதி இணைந்து நடித்திருந்தனர்.

அறிவாளிகள் நிறைந்த வேற்று கிரகத்தில் கலைஞர் யாரும் கலையை வளப்பதற்கு இல்லை என்பதால், அந்த கிரகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார் நம்பியார்.

பூமியில் கலையில் சிறந்தவராக இருக்கும் பானுமதியை நம்பியார் கடத்திக்கொண்டு தனது கிரகத்திற்கு சென்றுவிடுவார். அவரை மீட்பதற்காக எம்.ஜி.ஆர் அந்த வேற்று கிகரம் நோக்கி செல்வார்.

அப்போது கோமாளி வேஷத்தில் செல்லும் அவரிடம் சிலர் இந்தியாவை பற்றி பாடல் பாடு என்று சொல்ல, அப்போது எம்.ஜி.ஆர் பாடும் பாடல் தான் ‘’அதிசயம் பார்த்தேன் மண்ணிலே’’ என்ற பாடல். மக்கள் கவிஞர் என்று போற்றப்படும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் இந்த பாடலை எழுதியிருந்தார்.

இந்த பாடலை பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலில் மொத்த இந்தியாவில் பெருமைகளையும் பற்றி எழுதி இருந்த பட்டுக்கோட்டை, தமிழ் மொழிக்கும் இந்த பாடலில் முக்கியத்துவம் கொடுத்து வரிகளை சேர்த்திருப்பார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.