Breaking News :

Wednesday, November 06
.

’மெஸன்ஜர்’ டீசர் விரைவில் வெளியீடு!


பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர்.

இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சார் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார் , ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஶ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவரது முகநூலில் இருக்கும் மெஸன்ஜரில் ஒரு பெண் மெசேஜ் செய்து அதை தடுக்கிறாள்.

அவளுக்கு எப்படி தான் தற்கொலை செய்ய போவது தெரியும் என அவளிடமே மெசேஜ் செய்து ஶ்ரீராம் கார்த்திக் கேட்க, அதற்கு தான் இறந்து விட்டதாக சொல்கிறார். இறந்த பெண்ணொருவர் தன் உயிரைக் எப்படி காப்பாற்றினார், அந்த பெண் யார் என்பதை ஶ்ரீராம் கார்த்திக் விடை தேடி செல்வதே இந்த மெஸன்ஜரின் கதை. ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரசாந்த் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அபு பக்கர் இசையமைக்க, பாலசுப்ரமணியன் கலை பணிகளை செய்து இருக்கிறார். தக்ஷன் மற்றும் பிரசாந்த் பாடல்கள் எழுத சைந்தவி, சத்யபிரகாஷ், மற்றும் கபில் கபிலன் பாடியிருக்கிறார்கள்.

விக்ரவாண்டி அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

விரைவில் டீசர் மற்றும் டிரைலரை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.