Breaking News :

Sunday, September 08
.

‘மைனா’ புகழ் சேது நடிக்கும் ‘மையல்’ திரைப்படம்!


ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி வழங்கும் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் ‘மைனா’ புகழ் சேது நடித்திருக்கும் ‘மையல்’ திரைப்படம்!

 

நல்ல கதையம்சம் உள்ள கதைகள் மொழிகளைக் கடந்து பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். சமீபகாலமாக தமிழ் சினிமா இப்படி பல நம்பிக்கை தரும் படங்களையும் திறமைசாலிகளையும் வரவேற்று வருகிறது. மைனாவில் ‘பாஸ்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து பரவலான பாராட்டுகளைப் பெற்றவர் நடிகர் சேது. இப்போது முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ‘மையல்’ என்ற ஆழமான உணர்வுப்பூர்வமான படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். 

 

ஒரு சாதாரண, அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும், சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவுகளால் உண்மையான காதல் சிதைந்து விடுகிறது. இப்படி பாதிக்கப்பட்டவரின் கொந்தளிப்பான மனநிலையை மையக்கதையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ஏபிஜி ஏழுமலை.

 

மலையாள நடிகை சம்ரிதி தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மற்ற நடிகர்களுடன் பி.எல். தேனப்பன் மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திருவண்ணாமலைக்கு அருகில் அமைந்துள்ள கல்வராயன் மலையின் அழகிய இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் 37 நாட்களில் நிறைவடைந்துள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.