Breaking News :

Thursday, May 02
.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 96வது ஆஸ்கர் விருதுகள் விழா


லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 96வது ஆஸ்கர் விருதுகள் விழா கோலாகலமாக தொடங்கியது.

 

சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 1929 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே 96வது ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பி திரையரங்கில் நடைபெற்றது. இதில் வருகை தந்த பிரபலங்களுக்கு சிறப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கும் வருகை தந்துள்ளனர். 

 

* ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்கு 13 விருதுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

 

* சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை ‘The Holdovers’ படத்திற்காக Da’Vine Joy Randolph வென்றார்

 

* சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘War Is Over! Inspired by the Music of John & Yoko’! வென்றது

 

* சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை ‘The Boy and the Heron’ பெற்றுள்ளது!

வாழ்த்துக்கள், ஹயாவ் மியாசாகி மற்றும் தோஷியோ சுசுகி!

 

* சிறந்த மூல திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை Anatomy Of A Fall திரைப்படம் வென்றது!

 

* ஒப்பனை மற்றும் சிகை அலங்கார பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது POOR THINGS திரைப்படம்

 

* சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை ஜஸ்டின் டிரெய்ட், ஆர்தர் ஹராரி ஆகியோர் வென்றனர்


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.