Breaking News :

Tuesday, December 03
.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மதம் மாறியது?


கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நடிகை நயன்தாரா, இந்து மதத்திற்கு மாறியுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகை நயன்தாரா, கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். ஆனால் சினிமா துறைக்குள் நுழைந்ததால் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார், பின்னர் இந்து மதத்திற்கும் மாறினார். ஊடக செய்திகளின்படி, கடந்த 2011ம் ஆண்டு நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள ஆரிய சமாஜ் கோவிலுக்கு சென்று இந்து மதத்திற்கு மாறினார், சொந்த விருப்பத்தின் பேரில் அவர் மதம் மாறினாராம்.

இதுபற்றி ஒரு பேட்டியிலேயே ஓப்பனாக பேசியுள்ள நயன்தாரா, அதுகுறித்த கேள்விக்கு 'ஆம், நான் இந்து, இது எனது சொந்த முடிவு. நான் முழு நிகழ்வையும் உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் செய்தேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

நடிகை நயன்தாரா வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரிய சமாஜ் கோயிலுக்குச் சென்று, 'சுத்தி கர்மா' என்ற வேத சுத்திகரிப்புச் சடங்கின் அனைத்து நடைமுறைகளையும் பக்தியுடன் பின்பற்றினார் என்று ஆரிய சமாஜுகு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேபோல், சில தகவல்களின்படி, நயன்தாராவின் இந்த முடிவுக்குப் பின்னால் அவரது முன்னாள் காதலர் நடிகர் பிரபுதேவா இருப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா பிரபுதேவாவை மணக்க முடிவு செய்திருந்தார்.

அவரை திருமணம் செய்வதற்காகவே நடிகை நயன்தாரா, கிறிஸ்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார் என்று கூறப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, திருமணத்துக்கு முன்னரே அவர்களது உறவு முறிந்தது. பிரபுதேவாவை பிரிந்த பிறகும், நயன்தாரா இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறார்.

பிரபுதேவா உடனான பிரிவுக்கு பின்னர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்ட நயன்தாரா, அவரை சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்து கடந்த 2022 ஜூன் 10ந் தேதி திருமணம் செய்துகொண்டார்.

திருமணமான 4 மாதங்களிலேயே இந்த தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரானார்கள். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலகம் எனவும் பெயரிட்டுள்ளார் நயன்தாரா. குழந்தைகள் பிறந்த பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

நன்றி தமிழச்சி கயல்விழி

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.