Breaking News :

Monday, December 02
.

இளையராஜா 48


ஒரு இசை சகாப்தம். வரலாற்றில் ஒரு சரித்திரம்.

 

அமைதிபடுத்த முடியாத மனித மனதை இளையராஜா தன் இசையால் மயங்க வைக்க ஆரம்பித்த  நாள் இன்று .

 

இன்று இசைஞானி இளையராஜா திரைஉலகத்தில் அறிமுகம்  ஆன நாள் இன்று..

 

48 ஆண்டுகளாக. 

தமிழ் சமூகத்தை  தனது இசை மூலம்  மயங்க வைத்து இசைஞானி அறிமுகம் ஆன நாள் இன்று.

 

#இளையராஜா

 

ஒரு சிறிய புள்ளி விபரம்! 

 

1983 முதல், 1992 வரையான பத்தாண்டுகளில் இளையராஜா இசையமைத்தது 455 படங்கள். 

 

அதிலும், 1984 மற்றும் 1992ல்  வருடத்திற்க்கு  54 படங்கள்.இப்ப உள்ளவன் எவனாலும் சரி  இனி வர போகும் யாராலும் முடியாது..

 

சராசரி 270 பாடல்கள் ஒரு வருடத்தில்.

 

அதில் குறைந்தபட்சம் 250 பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.

 

சராசரி 162 மணிநேர திரை இசைக்கோர்வை ஒரு வருடத்தில்..

 

நாடி நரம்பெல்லாம் இசை வழிந்து ஓடினால் மட்டுமே இந்த அசுர சாதனை சாத்தியம்....

 

ஆயிரம் திரைப்படங்கள்..

 

அதில் குறைந்தது ஐயாயிரம் பாடல்கள்.

 

 அதில் மிகக் குறைந்தபட்சம்  நாலாயிரம் ஹிட் பாடல்கள்.

 

இவை இளையராஜாவின் "சாதனைகள் அல்ல".

 

நாடோடித்தென்றல் உட்பட பல படங்களின் பாடல்களை எழுதியதும், 

 

வெட்டவெளியில் கொட்டிக்கிடக்கும் எழுத்துக்களும், தனி ஆல்பங்களும், பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்த பக்திப் பாடல்களும்  சிம்பொனியும் -  எதுவுமே இவரது "சாதனை அல்ல".

 

ஆயிரம் பாடல்கள் கேட்டாலும், அதில் இளையராஜா பாடல்களை இனம் காணக் கற்ற நம் காதுகளும், துக்கம், மகிழ்ச்சி, ஏமாற்றம் வெற்றி, தோல்வி என எல்லா நிலைகளிலும் இவர் இசை தேடும் நம் மனங்களும்,

 

எந்த நல்ல இசை கேட்டாலும் அது இளையராஜாவே என்று தீர்மானிக்கும்  நம் புத்தியும் தான் இந்த இசை ராஜனின் சாதனைகள்!

 

மூன்று தலைமுறைகள் போற்றுமளவு யாரவது இசையில் இவர் போல் நின்று விட்டு வரட்டும்,  அப்போது அவர்களை இவரோடு ஒப்பிட்டுக்கொள்ளுவோம்...

 

தீபாவளி வாணவேடிக்கைகள் அழகுதான்,  ஆனால் அவை சூரியனுக்கு ஒப்பாகாது!

 

வாண வேடிக்கைகளை ரசிப்போம்,

 

இந்த இசைச் சூரியனை தொழுவோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.