Breaking News :

Tuesday, December 03
.

உல்லாசக் கப்பல் பயணம்: Human, Space, Time and Human


Human, Space, Time and Human - by Kim ki Duk -இது ஒரு கொரியப் படம்.

கிம் கி துக்-கின் 4 சீசன் போலவே இதுவும் 4 பார்ட்களை கொண்டது.
ஒரு உல்லாசக் கப்பல் பயணம் துவங்குகிறது. அதில் அரசியல் வாதியும் மகனும், ஒரு  ஹனிமூன் ஜோடி, காதலர்கள், விலைமாதர்கள், இளைஞர்கள் மற்றும் ஒரு கேங்ஸ்டர் கோஷ்டி என்று பலரும் பயணிக்கின்றனர்.

பயணம் இனிதே துவங்குகிறது. பிரச்சினை தங்குமிடம் மற்றும் உணவில் ஏற்படுகிறது. அரசியல்வாதிக்கு பல வகையான உணவும், சிறப்பான தங்குமிடமும் கொடுக்கப்படுகிறது. அதை எதிர்க்கிறார் ஹனிமூன் ட்ரிப்புக்கு வந்தவர். ஆனால் அரசியல் வாதி கேங்ஸ்டர் கோஷ்டியுடன் சேர்ந்து தன்னுடைய அதிகாரத்தை அங்கும் வியாபிக்கிறார். எதிர்த்தவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை.

ஆனால் ஹனிமூன் ஜோடி அவர்களது ரூமில் அந்தரங்கமாக இருக்கும் போது ஒரு இளைஞர் குழு அத்துமீறி அங்கு நுழைந்து கணவனை அடித்து வீழ்த்திவிட்டு அந்தப் பெண்ணுடன் பலவந்தத்தில் ஈடுபடுகிறார்கள், அதற்குள் அங்கு கேங்ஸ்டர் தலைவன் நுழைந்து அவர்களை அப்புறப்படுத்தி விட்டு அவளுடன் வல்லுறவு கொள்கிறான், அதுமட்டுமில்லாமல் அவளை அரசியல்வாதி அறைக்கும் அனுப்பி வைக்கிறான், அங்கு அரசியல்வாதியும் அவரது மகனும் அவளை சின்னாபின்னாப்படுத்துகின்றனர். இதனிடையில் அவளின் கணவன் கேங்க்ஸ்டர் தலைவனால் கொல்லப்படுகிறான். இரவு முழுவது அவள் பலரால் பலவந்தப்படுத்தப்படுகிறாள்.

எல்லோரும் உறங்கியபின் - பொழுது விடிகிறது. எல்லோருக்கும் அதிர்ச்சி கப்பலில் ஸ்பேசில் இருக்கிறது, மேகங்களுக்கிடையில் கப்பல் இருக்கிறது, கீழே அந்தரம் மேலேயும் அந்தரம் கப்பலில் சிக்னல் இல்லை. என்ன செய்வதென்று கப்பல் கேப்டனுக்கு புரியவில்லை. இது மாதிரி எப்போதும் ஏற்பட்டதில்லை.

இது ஒரு புறமிருக்க, கப்பலில் ஒரு பெரியவர் ஆரம்பத்திலிருந்தே கப்பலை சுத்தப்படுத்தி மணலை ஒரு கப்பில் சேர்த்துக் கொண்டேயிருக்கிறார். இந்த கேரக்டர் படம் முழுவது பேசுவதில்லை.

ஹனிமூனுக்கு வந்தவந்தவள் கணவனை இழந்தது தெரிந்து தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். ஆனால் அந்த கிழவன் அவளை காப்பாற்றி விடுகிறார்.

பிறகு உணவு பிரச்சினை, கப்பலில் உள்ள உணவு நீண்ட நாள் வராது என்பதால் பயணிகளுக்கு தினமும் மூன்றுவேளை ஒரு சோற்று உருண்டைதான் என்று அரசியல் வாதி சொல்கிறான், கப்பலின் முழுப்பொறுப்பையும் கேங்க்ஸ்டர் துணையுடன் அவன் எடுத்துக் கொள்கிறான்.

தினமும் கலவரம்தான். உணவுக்காக பல்வேறு பிரச்சினைகள், உணவு திருடும் ஒருவனை சுட்டுக் கொல்கிறான் அரசியல்வாதி, பயமுறுத்துகிறான் எல்லோரையும், ஒரு சமயம் ஹனிமூனுக்கு வந்தவள் கருவுறுகிறாள். அந்த குழந்தை யாருடையது என்று தெரியாததால் அதை அழிக்க முயல்கிறாள். பெரியவரே அதை தடுக்கிறார். அந்த குழந்தைதான் எதிர்காலம் என்றும் அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கூறி அவளை சமாதானப்படுத்துகிறாள்.

இறுதியில் அனைத்து உணவுகளும் காலியாகிவிடுகிறது, கலவரம் பெரிதாகிறது. ஆனால் பெரியவர் மட்டும் தான் சேர்ந்த மணலை வைத்து கொண்டு விதைகளை வைத்து செடிகளை உருவாக்குகிறார். முன்னர் உணவு கிடங்கிலிருந்து எடுத்து வைத்த முட்டையை வைத்து கோழியினத்தை உருவாக்குகிறார், எதிர்காலத்துக்கு உணவை உத்தரவாதப்படுத்துகிறார்.

ஒரு கட்டத்திலை ஒரு சிலரைத் தவிர எல்லோரும் கப்பலில் எல்லோரும் இறந்துவிடுகிறார்கள். மீதமிருப்பவர்களும் மனித மாமிசத்தை உண்ணும் நிலை. கருவுற்றப் பெண்ணுக்கு அரசியல்வாதியின் மகன் துணைபுரிகிறான். அவனும் அவளால் கொல்லப்படுகிறான். பெரியவரும் உயிர்த் தியாகம் செய்கிறார். ஆனால் அவர் வளர்த்த செடி கொடிகள் உணவைத் தருகின்றன. இறுதியில் அவளுக்கு குழந்தை பிறக்கிறது. அதை அவள் வளர்த்தெடுக்கிறாள். குழந்தையும் இளைஞனாகிறான்.
 
ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரைத் தவிர யாருமே இல்லை கப்பலில், இளைஞர் உணவருந்திய பிறகு தனது தாயையே பலவந்தப்படுத்த முயற்சிக்கிறான்.

படம் முடிகிறது.

இது ஒரு கற்பனை கதையாக இருந்தாலும், மனிதனின் அடிப்படை குணங்களையும் இந்த பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்பதையும் இயக்குநர் அழகாக படமாக்கியுள்ளார்.

மனிதன் அடிப்படையில் எதையும் செய்யக்கூடியவன் தான் என்பதையும் சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள்தான் என்பதையும் பதிவு செய்கிறார் இயக்குநர்.

நன்றி: ராஜேந்திர

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.