Breaking News :

Sunday, January 12
.

கௌதமன் நாயகனாக நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’!


வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் ’படையாண்ட மாவீரா’.

மண்ணையும் மக்களையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பில் படையாண்ட மாவீரனாகவே வாழும் வ.கௌதமனுக்கு எதிர் நாயகர்களாக (வில்லன்களாக) மன்சூரலிகான், "ஆடுகளம்" நரேன், "பாகுபலி" பிரபாகர், "வேதாளம்" கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் மோதுகின்றனர்.

பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் நெருப்பு தகிக்கும் நான்கு சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைக்க  நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் காட்சிப் படுத்தியுள்ளார்.

மேலும் படையாண்ட மாவீராவில் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், "ரெடின்" கிங்ஸ்லி, "நிழல்கள்" ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், "தலைவாசல்" விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடிக்கிறார். பேரழகான இசையை ஜிவி.பிரகாஷ் குமாரும், பாடல்களை '"கவிப்பேரரசு" வைரமுத்து அவர்களும் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவு வெற்றிவேல் மகேந்திரன், கோபி ஜெகதீஸ்வரன், கலை மோகன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு, மக்கள் தொடர்பு நிகில் கவனிக்கின்றனர்.

இப்படைப்பைப் பற்றி இயக்குநர் வ.கௌதமன்  " என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடுகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை படைப்பாக்கி ஒரு தரிசனமாக இவ்வுலகிற்கு தருவது மட்டுந்தான்.

சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனை படைத்துவிட்டேன். முந்திரிக்காடும் வன்னிக்காடும் மட்டுமே மீதமுள்ளது. தமிழ் மண்ணில் ஆகப் பெரும் பேரதிர்வுகளை உருவாக்கப் போகும் இப்படைப்பு உன்னையும் இந்த மண்ணையும் காக்க ஒருத்தாய் மக்களாக நில்லுங்கள்" என்று உரக்கப் பேச வருகிறது.

"மாவீரம்" சுமந்த இப்பெரு வரலாற்றின் படப்பிடிப்பு இதுவரை 76 நாட்கள் நடைபெற்று மீதமுள்ள ஐந்து நாட்கள் மெய்சிலிர்க்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு  க்காக படையாண்ட மாவீரா குழு தயாராகிக் கொண்டிருக்கிறது என உற்சாக நெகிழ்வோடு பேசி நிறைவு செய்கிறார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.