Breaking News :

Friday, May 03
.

பாலைவன டான்சர் திரைப்பட விமர்சனம்


Desert Dancer என்ற திரைப்படம் ரிச்சர்ட் ரேமோன்ட் இயக்கிய முதல் படம் ஆகும். இந்தப் படம் Afshin Ghaffarian என்ற ஈரானிய நடனக் கலைஞனைப் பற்றிய உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டது. 
1979 டெஹ்ரானில் ஜனாதிபதி தேர்தலின் போது உள்ள அரசியல், கலாச்சார சூழலில் எடுக்கப்பட்ட படம். 1979 டெஹ்ரான் யுனிவர்சிட்டியில் படிக்கும்போது ஒரு நடனக் குழுவை நடத்துகிறார். அரசுக்குத் தெரியாமல் தான். ஆனாலும் அடிப்படைவாதிகளின் கலாச்சார போலீஸ் இவர்களின் மீது ஏவப்படுகிறது. வன்முறைக்கு ஆளாகின்றனர். பின்னர் ஒரு சமயம் போலி விசாவின் மூலம் ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து பிரான்ஸ் செல்கிறான் நாயகன் Afshin Ghaffarian. அங்கு மேடையில் ஒரு பிரமாதமான நடனம் மூலம் தாங்கள் அனுபவிக்கும் அடக்குமுறையை அரங்கேற்றுகிறான். கைத்தட்டல் பெறுகிறான். பின் பிரான்ஸ் இவனுக்கு அரசியல் தஞ்சம் தருகிறது. தற்போது பாரிசில் அரசியல் விஞ்ஞானம்  படித்து வருகிறார் இவர். சிறிதேனும் போராட்ட குணம் இருந்தால் போதும் இந்தப் படத்தை ரசிக்கலாம்


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.