Breaking News :

Thursday, May 02
.

வீட்டுக்கு வருகிறேன் திரைப்பட விமர்சனம்


Yimou Zhang  இயக்கிய ஒரு சீனத் திரைப்படம். உலக சினிமாவில் இவர் ஒரு முக்கியமான இயக்குநர்.  எழுத்தாளரான கெலிங்கின் படைப்பான ‘‘கிரிமினல் யான்ஷி’’ என்ற நாவலைத் தழுவிய திரைப்படம்.  சீனத்தில் நடைபெற்ற கலாச்சார புரட்சியின் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் அரசியல் விமர்சனத்தோடு காதல், போராட்டம், பிரிவு, மீண்டும் சந்திப்பு என வாழ்வின் அத்தனை அத்தியாயங்களையும் தொட்டு விடுகிறது. ஒரு யதார்த்தமான கதை. ஆனாலும் அதில் உள்ள உண்மை நம்மை கவலை கொள்ளச்  செய்கிறது.

நாயகன் சீனக் கலாச்சாரப் புரட்சியில் அரசியல் கைதியாக்கப்பட்டு சிறைச் செல்கிறான். அதனால் தன் காதல் மனைவியையும், ஒரே மகளையும் பிரிகிறான். ஒரு அவர்களை சந்திப்பதற்காக சிறையிலிருந்து தப்பிக்கிறான். ஆனால், சும்மா விடுமா செஞ்சீன ராணுவம் அவனை கைது செய்ய அவன் வீட்டு வாசலிலேயே காத்திருக்கின்றனர். அவன் மனைவியோ இன்னும் கம்யூனிஸ்ட் கட்சியில் அபிமானியாகத்தான் இருக்கிறாள். கணவன் சிறையிலிருந்து தப்பித்து வருவதை அவள் விரும்பவில்லை. மகளோ தந்தையை காண ஏங்கி நிற்கிறாள். எதுவுமே நடக்காமல் மீண்டும் சிறைவாசம்.

ஒரு கட்டத்தில் கலாச்சார யுத்தம் முடிவுக்கு வந்து கைதிகளையெல்லாம் ஒவ்வொரு பிரிவாக விடுதலை செய்கிறது அரசு. தன் கணவனும் வருவான் என்று ரயில்வே நிலையத்தின் வாசலில் தினமும் காத்திருக்கிறாள். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

இறுதியில் அவன் ஒரு நாள் வந்தே விடுகிறான். ஆனால் என்ன துரதிருஷ்டம். மனைவிக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. காரணம் வயோதிகம் அல்ல. அவன் சிறையிலிருக்கும்போது ராணுவ அதிகாரி ஒருவன் பாலியல் தொல்லைக்கு ஆளாக்குகிறான். அதன் அதிர்ச்சியிலிருந்து அவளால் மீளவே முடியவில்லை. விளைவு உடல் நலம் பாதிக்கப்பட்டு, மறதிநோயால் ஆளாக்கப்பட்டு மிகுந்த துயரில் மூழ்கிப் போகிறாள்.

அவளுக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் ஒரு சில விஷயங்களே, அவளது மகள், அவளை இந்த நிலைக்குத் தள்ளிய ராணுவ அதிகாரி "Fang"  என்ற‌ பெயரும் தான். 

என்ன செய்வது மகள் தந்தையை வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். மனைவியில் என்னென்னமோ ஞாபகப்படுத்தியும் ஒன்றும் உபயோகப்படவில்லை. ரொம்பவும் முயற்சி செய்தால் அவனை "Fang" என்று நினைத்து வெளியே தள்ளிவிடுகிறாள்.

காலம் செய்த கோலம் இறுதியில் ரயில் நிலையத்தின் வெளியே அவன் வருகைக்காக அவனே தன் மனைவியோடு காத்திருக்கும் அவல நிலை.

நன்றி ராஜேந்திரன்


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.