Breaking News :

Sunday, September 08
.

கமலஹாசனிடம் ஆசி பெற்ற நடன இயக்குநர்கள் ஷோபி மற்றும் லலிதா ஷோபி


கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரங்களை ஆட்டுவிக்கும் பிரபல நடன இயக்குநர் ஷோபி மற்றும் அவரது மனைவி நடன இயக்குநர் லலிதா ஷோபி ஆகிய இருவரும் தங்களது மகள் ஸ்யமந்தகமணி அஷ்விகா ஷோபி உடன்  தனது குருவான உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து “விக்ரம்” படத்திற்கு வாழ்த்து கூறியதுடன், அவரிடம் ஆசி பெற்றிருக்கிறார். 

நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம்  நடன இயக்குநராக திரைத்துறையில்  அறிமுகமானவர். அவர் தனது கர்ப்பமாக உள்ள தனது மனைவி லலிதா ஷோபியுடன், திரைத்துறையில் அவர்களது  குருவாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் கமல்ஹாசன் அவர்களை,  “விக்ரம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு,  சந்தித்து வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், நடன இயக்குநர் 
லலிதா ஷோபி  அவர்களை அக்கறையுடன் உடல்நலம் விசாரித்து அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்  வாழ்த்து கூறினார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.