Breaking News :

Wednesday, November 06
.

கோலிவுட் உலகை மிரட்டிய டாப் 4 வில்லன்கள்!


கோலிவுட் உலகை மிரட்டிய டாப் 4 வில்லன்கள்.. அத்தனை பேருக்கும் டப்பிங் பேசி அசத்திய சேத்தன்!

சின்னத்திரை நாடகங்கள் மற்றும் வெள்ளித்திரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் மூத்த நடிகர் தான் சேத்தன்.
பெங்களூரில் பிறந்து ராமாயணம் என்கின்ற சீரியல் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கியவர் தான் சேத்தன்.

"மர்மதேசம்" என்ற நாடகம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில் சுமார் 800 எபிசோடுகள் ஓடி சன் டிவியை கலக்கிய "மெட்டி ஒலி" மற்றும், 1270 எபிசோடுகள் ஓடி "அத்திப்பூக்கள்" உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது நல்ல பல படங்களில் நடித்து அசத்தி வரும் சேத்தன் டப்பிங் கலைஞராகவும் தமிழ் சினிமாவில் பயணித்துள்ளார்.

பிரபல நடிகர் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "மருதமலை". பிரபல இயக்குனர் வேணு ரவிச்சந்திரன் மற்றும் சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் பிரபல மலையாள திரைப்பட நடிகர் லால். அந்த திரைப்படத்தில் நடிகர் லாலுக்கு டப்பிங் பேசியது சேத்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "படிக்காதவன்". இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் முதலில் வில்லனாக தோன்றினாலும், பிறகு ஹீரோயினின் அப்பாவாக அவருடைய காதலுக்கு கிறீன் சிக்னல் கொடுத்திருப்பார் பிரபல நடிகர் சுமன். அந்த திரைப்படத்தில் அவருக்கு டப்பிங் குரல் பேசியது சேத்தன் தான். சுமன் இளம் வயது முதலே தமிழ் திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் மூத்த நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

அண்மையில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் "மகாராஜா". நித்திலனின் அந்த படத்திற்காக, அவரை நேரில் அழைத்து பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் அவர்களுக்கும் டப்பிங் கொடுத்தது சேத்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை புத்தகங்களாக மட்டுமே மக்கள் படித்து மகிழ்ந்து வந்த பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து அசத்தியிருந்தார் இயக்குனர் மணிரத்தினம். இரண்டு பாகங்களாக வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது இந்த படம்.

இந்த நிலையில் அப்படத்தில் "கருத்திருமன்" என்ற கதாபாத்திரத்தில் ஓடக்காரராக நடித்திருந்த நடிகர் தான் யோக், அவருக்கு அந்த படத்தில் டப்பிங் பேசியிருந்தார் சேத்தன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.