Breaking News :

Thursday, May 02
.

கேப்டன் மில்லர் ஆடியோ வெளியீடு - கேப்டனுக்கு மௌன அஞ்சலி!


ண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் 12 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், கேப்டர் மில்லர் படத்தின், முன் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

 

இதில், நடிகர் தனுஷ், கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை பிரியங்கா மோகன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சந்தீப் கிஷன் உட்பட ஒட்டுமொத்த படக் குழுவினரும் கலந்து கொண்டனர். இதேபோன்று இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

நடிகர் சந்தீப் கிஷன் பேசியதாவது…

தனுஷ் அண்ணா ஃபேன்ஸுக்கு நன்றி. அவருக்கும் எனக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் தனித்துவமானது. ஒரு நடிகனாக அவருடைய தாக்கம் என்னிடம் நிறைய இருக்கிறது. நான் நடிகனாக ஆசைப்பட்ட போது, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது செல்வா சார், தனுஷ் அண்ணா தான். என் மீது அவர் நிறைய நம்பிக்கை வைத்துள்ளார், அதைக்காப்பாற்றுவேன். என் வீட்டிலேயே என்னை நடிகனாக நம்பாதபோது, என்னை ஹீரோவாக நம்பி, ஃபர்ஸ்ட் செக் தந்த, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. சினிமா மேல் காதல் இருந்தால் தான் இப்படிப்பட்ட படம் செய்ய முடியும், அதற்காக சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. தனுஷ் சார், அருண் மாதேஸ்வரனை நம்பி இப்படம் செய்ததற்கு நன்றி. அருண் உழைப்பு மிகப்பெரிது. கேப்டன் மில்லருக்காக எல்லோருமே கடுமையாக உழைத்துள்ளனர். சிவராஜ்குமார் தங்க மனசுக்காரர், பிரியா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. எல்லோருமே காதலுடன் இப்படத்தைச் செய்துள்ளோம். இப்படம் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் தரும் நன்றி. 

 

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது.. 

கேப்டன் மில்லர், புது வருடத்தில் முதல் ஈவண்ட், மகிழ்ச்சி. தமிழ் சினிமாவும், இந்திய சினிமாவும், பெருமைப்படும் படைப்பாக இப்படம் இருக்கும். எல்லோரும் அவ்வளவு பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். சில படங்கள் செய்யும் போது தான் நாம் பெரிய, முக்கியமான படத்தில் வேலை செய்வதாகத் தோன்றும். இந்தப்படம் அந்த மாதிரியான படம். தனுஷ் சாருடன் பொல்லாதவனில் ஆரம்பித்த பயணம். ஒவ்வொரு தடவையும் இதற்கு அவார்ட் கிடைக்கும் என்று சொல்வேன், அதெல்லாம் தரமாட்டார்கள் என என்னைக் கிண்டல் செய்வார். ஆனால் ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் எல்லாம் செய்தவுடன், நிறைய  விருதுகள் வாங்கி, கலக்கி விட்டார். இப்படத்தில் ரொம்ப புதுசாக ஒன்றைச் செய்துள்ளார். எல்லோருக்கும் பிடிக்கும். படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி. 

 

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர்  T.G.தியாகராஜன் பேசியதாவது..,

கேப்டன் மில்லர் படத்தைப் பற்றி எல்லோரும் நிறையச் சொல்லி விட்டார்கள். என்னுடைய சினிமா ஜர்னியில் நான் அட்மையர் பண்ணியது என்றால் ரஜினி சார் தான். அவருடன் 5 படங்கள் செய்தோம். அதற்குப் பிறகு, நான் அதிகம் ரசிக்கும் நடிகர் தனுஷ். அவருடன் 3 படங்கள் செய்துவிட்டோம், இன்னும் பயணம் தொடர்கிறது. அருண் பற்றி முதலில் என் மகன் தான் சொன்னார். அவர் படம் ராக்கி பார்த்தேன், என்னைப் பிரமிக்க வைத்தது. பாரதிராஜா சாரை சந்தித்தபோது, அருண் மிகப்பெரிய திறமைசாலி என்றார். அந்த நம்பிக்கையில் தான் தனுஷ் சாரை அணுகினோம். அருண் ஹாலிவுட் தரத்தில் இப்படத்தைத் தந்துள்ளார். எங்கள் நிறுவனத்திலிருந்து பொங்கலுக்கு வந்த, விஸ்வாசம் படம் போல, இப்படமும் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். தனுஷ் சார் மிகக்கடின உழைப்பைத் தந்துள்ளார். சிவராஜ்குமார், சந்தீப், பிரியா, ஜீவி பிரகாஷ் அனைவருக்கும் நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. 

 

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியதாவது… 

T.G.தியாகராஜன் சாருக்கு என் முதல் நன்றி. என்னை நம்பி கேப்டன் மில்லர் போன்ற பெரிய படம் செய்ததற்கு நன்றி. முதலில் நான் தேவதாஸ் என்ற கதை எழுதினேன், ஜீவிக்கு தெரியும். அந்தக்கதைக்கே தனுஷ் சாரைத்தான் அணுக முயற்சித்தேன் முடியவில்லை. ராக்கிக்கும் அவர் தான் மனதிலிருந்தார், ஆனால் நடக்கவில்லை. இந்த வாய்ப்பு வந்த போது, உடனே இந்தக்கதையை அனுப்பி விட்டேன். என்னை நம்பி வந்துவிட்டார். ராக்கி வரும் முன்னரே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். அடுத்து இன்னும் ஒரு பெரிய படம் செய்யப்போகிறோம். நான் எந்தக்கதை எழுதினாலும், அவர் தான் முதன் முதலில் மனதில் வருகிறார். என்னை நம்பிய தனுஷ் சாருக்கு நன்றி. ஜீவி எனக்கு மிகவும் நெருக்கம், அவரோடு படம் செய்தது மகிழ்ச்சி. சிவராஜ்குமார் சாரைச் சந்திக்கப் பெங்களூர் போனேன், அவரைப் பார்த்தது காட்ஃபாதர் பட அனுபவம் போல இருந்தது. அங்கு அவர் அப்படிதான் இருந்தார். தனுஷ் எனக்குப் பிடிக்கும், அவருக்காக நடிக்கிறேன் என்று நடிக்க  வந்தார். அவர் ஒரு  ஸ்டார், ஆனால் எங்களை எல்லாம் ஈஸியாக வைத்துக் கொண்டார். பிரியங்காவிற்கு முதல் நாள் ஷீட்டிங்கிலேயே, துப்பாக்கி தந்துவிட்டோம், பயந்து விட்டார். கொஞ்ச நாளில் பழகிவிட்டார், அட்டகாசமாக நடித்துள்ளார். படத்தில் உழைத்த  அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும், நன்றி. 

 

நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது.., 

T.G.தியாகராஜன் சார், அர்ஜூன் எல்லோருக்கும் நன்றி. அருண் வந்து கேப்டன் மில்லர் கதை சொன்ன போதே, தனுஷ் சார் நடிக்கிறாரா? நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். அவரை முதல் படத்திலிருந்தே  எனக்குப் பிடிக்கும். சிம்பிள், சூப்பர் ஆக்டர் என்றால் அவர்தான். எப்போதும் அவர் படங்கள் நிறைய முறைப் பார்ப்பேன். இந்தபபட  ஷீட்டிங் செம்ம ஜாலியாக இருந்தது. அவருக்காக எப்போதும், நான் நடிக்க தயார். இந்தியாவில் மட்டும் இல்லை, உலக அளவில் சிறந்த ஆக்டர் தனுஷ். இப்படத்தில் சந்தீப், பிரியங்கா எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஜீவி பிரகாஷ் சூப்பராக மியூசிக் செய்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி. 

 

நடிகர் தனுஷ் பேசியதாவது .. 

சிறு துளி பெரு வெள்ளம்,  2002 லிருந்து சேர்த்த துளிகள், ரசிக பெருவெள்ளமாக வந்துள்ளது. உங்களால் தான் நான். கி


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.