தமிழ் சினிமாவில் இதுவரை ரிலீஸ் ஆன படங்களில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய 5 திரைப்படங்கள் பற்றி இந்த லிஸ்ட்டில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வார வாரம் புதுப்படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளது. அப்படி ரிலீஸ் ஆனாலும் அனைத்து படங்களும் வரவேற்பை பெறுவதில்லை. அப்படி 2024-ல் இதுவரை ரிலீஸ் ஆன படங்களில் ஹிட் ஆன படம் எத்தனை என்பதை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் 2024-ல் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன தெரியுமா?
1. கோட்
நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் தான் நம்பர் 1 இடத்தில் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இப்படம் உலகளவில் ரூ.460 கோடி வசூலித்து இந்த ஆண்டின் அதிக வசூல் அள்ளிய தமிழ் படமாக திகழ்ந்து வருகிறது. இந்த சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை.
2. வேட்டையன்
கோட் படத்துக்கு அடுத்தபடியாக ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன வேட்டையன் திரைப்படம் உள்ளது. இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடி வசூலித்து வெற்றிநடை போட்டு வருவதோடு அதிக வசூல் அள்ளிய படங்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
3. ராயன்
தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்த ராயன் திரைப்படம் தான் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தனுஷின் 50வது படமான இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
சுமார் ரூ.70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.156 கோடி வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்
4. மகாராஜா
விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா தான் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்களின் பட்டியலில் 5ம் இடம்பிடித்திருக்கிறது. இப்படத்தை நித்திலன் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் நட்டி நட்ராஜ், அனுராக் கஷ்யப், சிங்கம்புலி, மம்தா மோகன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.106 கோடி வசூலித்து இருந்தது
அரண்மனை 4
சுந்தர்.சி இயக்கி தமன்னா,ராசி னா, கோவை சரளா, யோகி பாபு கூட்டணியில் உருவான அரண்மனை 4 திரைப்படம் 4௦ கோடி செலவில் உருவாகி 96 கோடி வசூல் செய்துள்ளது.