Breaking News :

Thursday, May 02
.

Borgman மூவி விமர்சனம்


இயக்குனர் அலெக்ஸ் வான் வார்மர்டம் டச்சு நாட்டை சேர்ந்தவர். அவருடைய கதை, வசனம் இயக்கத்தில் உருவான வித்தியாசமான த்ரில்லர்தான் போர்க்ன். உயர்மட்ட குடிகளுக்கும் கீழ்மட்டகுடிகளுக்கும் உள்ள வகுப்பு பேதத்தை மிகவும் த்ரில்லிங்காக இந்தப் படம் விவரிக்கிறது.

போர்க்ம‌ன் அன்றாட நாகரிகத்திற்கு அப்பாற்பட்டவர். அவன் தலையும் முகமும் கத்தியை கண்டு பல நாட்கள் ஆகியிருந்தன. அழுக்கடைந்த அவன் அரைகுறை உடையோடு தானே தோண்டி வைத்துள்ள சிறிய குகையில் தூங்கிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் தனி ஆள் அல்ல.  அவனை வேட்டையாட மூவர் குழு. அதில் ஒரு மதகுருவும் அடக்கம். அவர்கள் வீசும் ஈட்டியில் நூலிழையில் அவன் தப்பித்து விழித்து எழுந்து ஓடுகிறான். அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கிறான். 
போர்க்மேன் அவன் வசிக்கும் காட்டைவிட்டு அருகில் உள்ள உயர்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைகிறான். அங்கு ஒரு வீட்டின் அழைப்பு மணியை அடித்து, கதவை திறக்கும் அந்த வீட்டு எஜமானியிடம் தான் அங்கு குளிக்க அனுமதி கிடைக்குமா? (அது வகுப்பே பேதத்தின் ஒரு குறியீடாகவே உள்ளது) என்று வினவுகிறான். எந்தவித தயக்கமுமின்றி கதவு சாத்தப்பட்டு அவன் விரட்டப்படுகிறான்.

அடுத்து அவன் அணுகும் வீட்டில் ரிச்சர்டை சந்திக்கிறான். அவன் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிகிறான்.. அவனும் போர்க்மெனை மதிக்க மறுத்து கதவை மூடுகிறான். போர்க்மென் ரிச்சர்டின் மனைவி மரினா தனக்கு ஏற்கெனவே தெரியும் என்றும்,  முன்பு ஒரு முறை சிகிச்சை அளித்ததாகவும் கூறுகிறான். அங்கே வந்த மரினாவோ பயத்தில் போர்க்மேனை தனக்கு தெரியாது என்று மறுக்கிறாள். ரிச்சர்ட் கோபம், பொறாமை கலந்த கலவர நிலையில் போர்க்மேனை அடித்து சாய்த்து விடுகிறான். கதவை மூடிவிட்டு போய்விடுகிறான். போர்க்மேன் சுயநினைவிழந்து விழுந்து கிடக்கிறான். சற்றுநேரம் கழித்து அவன் நிலையறிய மரினா வருகிறாள். ஆனால் அங்கு போர்க்மேன் இல்லை.

ரிச்சட்டின் மூன்று குழந்தைகள்  அவர்களின் ஆயா ஸ்டின்னுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்புகின்றனர். ரிச்சர்ட் வேலைக்கு போய்விடுகிறான். மரினா அன்று நடந்த சம்பவத்தால் குழம்பி போய் இருக்கிறாள். அங்கு அடிபட்டு கிடந்த போர்க்மேன் வீட்டிற்குள்ளேயே மறைந்து இருக்கிறான். அவனை கண்டதுமம் மரினா  சற்று அதிர்ச்சியடைந்து பிறகு, அவன் அங்கேயே குளிப்பதற்கு அனுமதிக்கிறாள். மேலும் தோட்டத்தில் உள்ள ஒரு அவுட் ஹவுஸில் அவன் தங்கிக்கொள்ளவும் தன் கணவனுக்குத் தெரியாமல் அனுமதிக்கிறாள். தோட்டக்காரன் ஐடின் அவனை பார்த்து விடுகிறாள். 

மரினா தன் சொந்த வீட்டில் அமைதியை இழந்து தவிக்கிறாள். தன்னுடைய வீட்டில் தன் உணர்வுகளை ஒரு அந்நியன் கட்டுப்பாட்டில் இழந்து தவிக்கிறாள். அவளுக்கு தூக்கத்தில் மிக மோசமான கனவுகள் வந்து அவள் தூக்கமிழந்து தவிக்கிறாள்.

அன்று திடீரென‌ இரண்டு நாய்கள் வெறித்தனமாக வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. ஆனால் போர்க்மேன் அவற்றை விரட்டியடிக்கிறான். அன்று இரவு ரிச்சர்ட், மெரினா தோட்டக்காரன்  ஸ்டின் மூவரும் தூங்கிய பிறகு குழந்தைகளை அழைத்து அழகான கதை சொல்லுகிறான். 

பிறகு அவன் சமயம் பார்த்து தோட்டக்காரனை கொன்று தோட்டத்தில் புதைத்து  விடுகிறான். அவனை தொடர்ந்து வந்த அந்த மூவரையும் அழைக்கிறான். அவன் நினைத்ததை நினைத்தபடி முடிக்கிறான்.  அந்த பெண்ணின் தேவையில்லாத கருணை, கணவனுக்கு வெளிக்காட்டாத நடவடிக்கை, குடும்பத்தின் செல்வ செழிப்பு கொள்ளை போனது, குடும்பமே சீரழிந்தது ஏமாற்றமே மீதம்.  பார்ப்பவர் நெஞ்சை தொடும் நிகழ்வுகள் ஏராளம். வகுப்பு பேதத்தை காட்டும் வித்தியாசமான ஒரு த்ரில்லர்.

நன்றி ராஜேந்திரன்


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.