Breaking News :

Monday, December 02
.

ஏவிஎம் லோகோ உருவான வரலாறு!


 சென்னையின் அடையாளங்களாக ஸ்பென்சர் பிளாசாவும், பீனிக்ஸ் மாலும், எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலும் இருந்து கொண்டிருக்கும் நிலையில் அன்றைய சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கியவை சென்ட்ரல் ரயில் நிலையமும், ரிப்பன் பில்டிங்கும், எல்.ஐ.சி கட்டிடமும், ஏ.வி.எம். ஸ்டுடியோ  உலக உருண்டையும் தான். பல புகழ் பெற்ற நடிகர்களையும்,தொழில்நுட்பக் கலைஞர்களையும் உருவாக்கி சினிமாவின் பல்கலைக்கழகமாக விளங்கியது. ஆனால் இன்று பரப்பளவு சுருங்கி சுருங்கி சில சீரியல்களும், ஓடிடி தொடர்களுமாக இங்கு ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

வடபழனி பஸ் நிலையம் அருகே ஏவிஎம் உலக உருண்டை அன்றைய காலத்தில் எப்படி சினிமாவின் உலகமாக இருந்தது இன்று மியூசியமாக கண்ணாடிப் பெட்டிக்குள் அடைபட்டு விட்டது. எனினும் இன்றும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருப்பது ஏ.வி.எம். லோகோவும், அதற்கு ஏற்ப வரும் இசையும் தான். இந்த லோகோ எப்படி உருவானது தெரியுமா? 1947-ல் வெளியான ஏவிஎம்-ன் முதல் படம் நாம் இருவர் படம் சுதந்திர தினத்தன்று ரிலீஸ்  செய்யத் தயாராக இருந்தது.

அந்த நேரத்தில் ஜுபிட்ர் பிக்சர்ஸ், ஜெமினி ஸ்டுடியோ போன்றவை பிரபலமாக இருந்தன. மேலும் அவற்றிற்கெல்லாம் தனித்தனியே லோகோ இருந்தது.

இந்நிலையில் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தமது நிறுவனத்திற்கும் இதேபோல் ஒரு லோகோ உருவாக்க முனைந்தார். அதனை நாம் இருவர் படத்தில் பயன்படுத்த நினைத்தார். ஆனால் படம் ரிலீசாக குறைந்த நாட்களே இருந்தன. அந்நாளில் பிரபல ஓவியராக இருந்த ஒருவரை அழைத்து வரையச் சொல்லியிருக்கின்றனர். அவரும் வரைந்து முடிக்க அதற்கு ஏதாவது பின்னனி இசை கொடுக்க வேண்டும் என்று அப்போது முன்னனி இசையமைப்பாளராக இருந்த சுதர்சனத்தை அணுகியிருக்கிறார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். 2 நாட்களில் இசை வேண்டும் என்று கேட்க சுதர்சனிடம் அப்போது 2 இசைக் கலைஞர்கள் தான் இருந்திருக்கின்றனர்.

ஒரு நாள் அதிகாலை வானொலிப் பெட்டியைக் கேட்கும் போது இன்றளவும் வானொலி ஒலிபரப்புத் தொடங்கும் போது ஒரு கிளாரினெட் இசை ஒலிக்கும்.எனவே சுதர்சனத்துக்கு ஒரு ஐடியா வந்திருக்கிறது. இதே போன்று ஓர் இசையை அமைக்கலாம என மெய்யப்ப செட்டியாரிடம் கேட்க அவரும் ஓகே சொல்லியிருக்கிறார். அப்படி வெறும் 2 இசைக் கலைஞர்களை வைத்து ஒரே ஒரு மைக்கில் மட்டும் பதிவு செய்யப்பட்டு மொத்தத்தில் 4 பேர்தான் இந்த இசையை உருவாக்கினர்.

இன்றும் 75 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றும் ஏ.வி.எம். லோகோ மட்டும் சில மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் அதே இசைதான் பின்னனியில் ஒலிக்கிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.