Breaking News :

Wednesday, December 04
.

ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி தெரியாத தகவல்கள்?


ஏ.ஆர்.ரஹ்மான் , 19 ந்தேதி விவாகரத்து என மனைவியின் அறிவிப்புக்குப் பிறகு ஒத்துக்கொண்டு டுவிட்டர் எக்ஸ் தளத்தில் அறிவித்து ஆமோதித்து இருக்கிறார்.
அதனால் மக்களிடையே பொதுக்கருத்து மற்றும் விமர்ச்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

ரஹ்மான் பிறவி இந்துவாக இருந்து இஸ்லாம் மதம் மாறினவர்.  இஸ்லாமிய மனைவி சாய்ராபானு மற்றும் இவரது சகோதரி சினிமா உலகில் பிரபலங்களை மணந்தவர்கள்.

இஸ்லாமிய முறை திருமணங்கள் நீதிமன்றங்களுக்குச் செல்லமுடியாது.
ஆனால் கணவன் மனைவிக்கு இஸ்லாமிய முறைகளில் விவாகரத்து கொடுக்கும்போது மெஹர் என்ற சன்மானம் , பணம், சொத்து கொடுத்தாக வேண்டும். உணர்ச்சிகளைப் பொறுக்க முடியாமல் இருவரும் பிரிந்தனராம்.

மெஹர் என்பது இஸ்லாமிய திருமணத்தின்போது மாப்பிள்ளை பெண்ணுக்கு அளிக்கும் பணம், நகை, சொத்து போன்றவை. ஒரு வேளை மணமுறிவு ஏற்பட்டால் இந்தச் சொத்துக்கள் பெண்ணுக்கே சேரும். மெஹருக்கு அளவே கிடையாது. சாய்ராபானுவுக்கு இவ்வாறு ரூ. 100 கோடிக்கு மேலும் இருக்கிறதாம்.

மேலும் தம்பதியினர் பிரிவதற்கு முன்பு தங்களுக்குள் ஒரு தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் தீர்மானித்துக் கொள்ளலாம். அளவே கிடையாது. நீதிமன்றங்களுக்கு செல்லமாட்டார்கள்.  பேசப்பட்ட மெஹரை செட்டில் பண்ணியே தீரவேண்டும்.

இது மட்டுமில்லாமல் இஸ்லாமிய மனைவி பிரியும்போது கணவனின் சொத்தில் பங்கு கேட்க உரிமை உண்டு.

நவம்பர் 20 -2024,

"எங்கள் திருமணவாழ்வில் நாங்கள் 30 ஆண்டுகளை எட்டுவோம் என நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும் இந்தச் சிதைவில் , துண்டுகள் மீண்டும் தங்களது இடத்தை மீண்டும் அடையும் என நம்பமுடியவில்லை, என்றாலும் அர்த்தங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறோம். எங்களது நண்பர்கள், இந்த பலவீனமான நேரங்களைக் கடந்து செல்லும்போது ஆதரவாக இருந்து தனியுரிமைகளுக்கு மதிப்பு அளித்ததற்கும் நன்றி " என ரஹ்மான் அறிவித்துள்ளார்.

ஏஆர் ரஹ்மான் விவாகரத்து அறிவித்த 8 மணிநேரத்தில் இவரது குழுவில் மற்றும் இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மோகினி டே Mohini Dey என்ற 29 வயது கல்கத்தாவைச் சேர்ந்த பெண், கணவர் மார்க்கை விவாகரத்து செய்திருக்கிறார்.

(மோகினியின் அறிவிப்பும் ஏஆர் ரஹ்மன் அறிவிப்பும் ஒரே தொணியில் வார்த்தைகள் இருக்கின்றன).

ஏஆர் ரஹ்மான் மகள் இவரது இசைக்குழுவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து மணம் செய்தவர். ரஹ்மான் விரும்பவில்லை.  ஏஆர் ரஹ்மானின் சொத்துமதிப்பு ரூ.2100 கோடி. இந்த சொத்தில் விவாகரத்து பெறும் இஸ்லாமிய மனைவிக்கும் பங்கு உண்டு.

ரஹ்மான் அமைதியானவர். ஆனால் பெண்கள் இஸ்லாமிய முறைகளில்தான் இருக்க, ஆடை, வெளிஉலகில் இருக்கவேண்டும் என வலியுறுத்துபவர்.  பல நண்பர்கள், அரசியல் பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள், தலைவர்கள் ஒன்றுசேர வற்புறுத்தி அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

உச்சநிலையில் இருப்பவர்கள் மணமுறிவு என்று வந்தவுடன் சாதாரண மனிதர்களாகி விடுகின்றனர்.  பணம், புகழ், உறவுகள்உராய்வு பிரிவுக்குக் காரணங்கள்.  எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பவர் ரஹ்மான். மனைவி முதலில் முறிவை அறிவித்ததால் மனைவிக்கு உறவில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

பிள்ளைகளின் திருமண ஏற்பாடுகளில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கலாம். ரஹ்மான் மதத்தில் கண்டிப்பானவர்.  ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் டிசம்பர்-2020ல் காலமானார்.
ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றும் மருமகன் ஜிவி பிரகாஷ் மனைவி சைந்தவியை சமீபத்தில் விவாகரத்து செய்திருக்கிறார்.

ரஹ்மான் தனக்கு மனைவியாக வரப்போகிறவள் அழகு, பட்டதாரி, வீட்டோடு இருக்கும் பெண் தேவை எனச்சொல்ல, இவரது தாய் ஏற்பாட்டில் 1995 ஆம் ஆண்டு சாய்ராபானுவை திருமணம் செய்து கொண்டார். கதீஜா, ரஹீமா என 2 மகள்கள், அமீன் என்ற மகனும் இத்தம்பதிக்கு உள்ளனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.