Breaking News :

Thursday, May 02
.

அமேசான் மினிடிவி (Amazon miniTV) தனது பிராந்திய பகுதி


 பார்வையாளர்களுக்காக பிரபலமான 200+ டப் செய்யப்பட்ட ஷோஸ் மற்றும் மூவீஸ்களை வெளியிடுவதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பிரிவுகளில் காலடி எடுத்து வைக்கிறது  

ஹண்டர் - டூடேகா நஹி தோடேகா, ரக்ஷக் – இந்தியாஸ் பிரேவ்ஸ், பிசிக்ஸ் வாலா போன்ற இன்னும் பல ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்ற ஷோஸ் மற்றும் மூவீஸ்களின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளைப்  பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.!

 பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அமேசான் மினிடிவியில்(Amazon miniTV) இலவசமாக பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படும்

 

மும்பை, ஏப்ரல் 19 2024: – பல்வேறுவகையான, சிறப்பு மிக்க உள்ளடக்கத்தை கொண்ட அசல் மற்றும் டப் செய்யப்பட்ட ஷோஸ் மற்றும் மூவீஸ்களை  வழங்குவதில் புகழ்பெற்ற நிறுவனமான அமேசானின் இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான அமேசான் மினி டிவி (Amazon miniTV) -, அடுத்து வெளியிடவிருக்கும் அதன் புத்தம் புதிய அறிவிப்பின் மூலம் ஒரு மிகப் பரந்த அளவிலான  பார்வையாளர்களுக்கு மிகுந்த உற்சாகமளிக்கும் தகவலை வெளியிட முனைப்புடன் தயாராகி வருகிறது. இந்த ஸ்ட்ரீமிங் சேவையானது அதன் வீச்சளவு வரம்பை  விரிவுபடுத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்ட 200 க்கும் மேற்பட்ட ஷோஸ் மற்றும் மூவீஸ்களின் விரிவான தொகுப்பை வெளியிடுகிறது. 

 

டப் செய்யப்பட்ட மனதைக் கொள்ளைகொள்ளும் இந்த அற்புதமான திரைப்பட ஷோஸ் அண்ட் மூவீஸ்களின் வரிசையில், மற்றவற்றுக்கிடையில் ஹண்டர்-டூடேகா நஹி தோடேகா, ஃபிசிக்ஸ் வாலா, அதிரடி காட்சிகள் நிறைந்த தேசபக்தித் தொடர்  ரக்ஷக்-இந்தியாஸ் பிரேவ்ஸ், இளம் காதல் தொடர் ஹைவே லவ் போன்ற உன்னதமான ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற மினிடிவியின் ஹிந்தி அசல் திரைப்படங்களும் அடங்கும். இது தவிர, ட்விலைட், நவ் யூ சீ மீ, ஹங்கர் கேம்ஸ் தொடர்கள், ஸ்டெப் அப் ஃபிரான்சைஸ், ரெட் போன்ற இன்னும் பல காலத்தால் அழியாத கலைப்படைப்புக்கள் உட்பட, தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்ட ஹாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் தொகுப்பையும் பார்வையாளர்கள் கண்டு அனுபவித்து மகிழலாம். மேலும் முழுமையான சிறந்த உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்டு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்ட கொரியன், துருக்கிய மற்றும் மாண்டரின் மொழி ஷோஸ் மற்றும் மூவீஸ்களை  இந்த சேவையானது வழங்கும்.

 

அமோக் துசாத் ஹெட் ஆஃப் கான்டெண்ட், அமேசான் மினி டிவி, தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு கூறினார், “எங்கள் பார்வையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் மனதை ஆழ்ந்துபோகச்செய்யும்  காட்சி அனுபவத்தை வழங்குவதே அமேசான் மினி டிவியில் எங்களின்  குறிக்கோளாக உள்ளது. எங்கள் பார்வையாளர்களின் பல்வேறு வகையான விருப்பங்களைப் பூர்த்தி செய்வதையும்  மற்றும், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான ஷோஸ் மற்றும் மூவீஸ்களை தங்களுக்கு விருப்பமான மொழியிலேயே கண்டு ரசிப்பதை உறுதி செய்வதையும் எங்கள் குறியிலக்காக கொண்டுள்ளோம் பல்வேறு வகைப்பிரிவைச் சேர்ந்த உள்ளடக்கங்களைக் கொண்ட அசல் மற்றும் டப்பிங் செய்யப்பட்ட எங்கள் ஒரு பரந்த விரிவான வழங்கல்களுடன் பார்வையாளர்கள் ஆழ்ந்த ஈடுபாட்டை கொண்டிருப்பார்கள் என்பதில் நாங்கள் நிச்சயமாக உள்ளோம்.

 

“மினி டிவி வாடிக்கையாளர்கள் பிரபலமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை அனுபவித்து மகிழும் வகையில் பல்வேறு மொழிகளில் விரிவுபடுத்தி வழங்கி அவர்களின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மென்மேலும் மேம்படுத்துவதில் நாங்கள் மிகப் பெரும் உற்சாகமடைந்திருக்கிறோம். இந்த முன்முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க சாதனையின் மைல் கல்லாக விளங்குவதோடு எங்கள் பிராந்திய பகுதியின்  பார்வையாளர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதில் எங்களுக்குள்ள தீவிரமான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. புதிய விளம்பரதாரர்களுடனான தொடர்புகளை எங்களுக்கு உருவாக்குவதோடு, கூட்டாண்மைகளை கட்டமைப்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கவும் இந்த முன் முயற்சிகள் எங்களுக்கு உதவும்” என்று அருணா தர்யானனி டைரக்டர் அண்ட் பிசினஸ் ஹெட், அமேசான் மினிடிவி தனது எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டார்.

இந்த பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட, ஷோஸ் மற்றும் மூவீஸ்   பிரத்யோகமான இலவச அமேசான் மினிடிவி ஸ்ட்ரீமிங்கானது அமேசான் ஷாப்பிங் ஆப் உள்ளகத்திலிருந்தும், பிரைம் வீடியோ, ஃபயர் டிவி, ஸ்மார்ட் டிவிகளிலும்  வெளியிடப்படும் அல்லது அதற்கான ஆப்ஐ பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 

 

Trailer Link: https://www.youtube.com/watch?v=8f2DQW49zgI


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.