Breaking News :

Sunday, October 13
.

நடிகை சோனாவின் சுயசரிதை ‘ஸ்மோக்’ வெப் சீரிஸ்


தென்னிந்திய திரையுலகில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக இருப்பவர் நடிகை சோனா. இவர், ‘ஷார்ட்பிளிக்ஸ்’ ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஸ்மோக்’ என்கிற வெப்சீரிஸ் மூலமாக இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார். 

அவருடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களை கொண்டு உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் பல சீசன்களாக வெளியாக இருக்கிறது.  ‘ஸ்மோக் சீசன் 1’ படப்பிடிப்பு நிறைவுறும் தருவாயில் இருக்கும் நிலையில் இதன் இயக்குனரான சோனா, இந்த வெப்சீரிஸில் தன்னுடைய சொந்த கதாபாத்திரத்தில் தானே நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

சோனாவின் வெவ்வேறு வயதிலான காலகட்டங்களில் அவரது கதாபாத்திரமாக நடிக்கும் ஆதினி (5 வயதில்), ஜனனி (14 வயதில்) மற்றும் ஆஸ்தா அபய் (30 வயதில்) ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. 

 

யுனிக் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்புடன் சேர்ந்து வெளியான கதாபாத்திர போஸ்டரானது இந்த வெப்சீரிஸில் சோனா அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது.   

 

இந்த தகவலை பகிர்ந்துகொண்டுள்ள நடிகை சோனா கூறும்போது, “புகை படர்ந்த கனவுகள் நிறைந்த வாழ்க்கையில், என்னவென்றே தெரியாத இடங்களுக்கோ அல்லது சூழல்களுக்கோ வாழ்க்கை எங்கே என்னை அழைத்து செல்லும் நிலையில் சரியாக என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. 

 

என்னுடைய கதையை சொல்வதால், கேட்கப்பட்ட கேள்விகள் அல்லது மறந்துபோன கேள்விகள், ஒளிந்துள்ள உண்மைகள் அல்லது சொல்லப்படாத உண்மைகள் குறித்து இதை இயக்கியுள்ளதுடன் அதில் அனைத்திலும் ஒரு பாகமாகவும்  இருந்தேன். என் வாழ்க்கைக்குள் வந்து என்னை பாருங்கள்” என்கிறார், சோனா.

 

வரும் சம்மர் சீசனில் ஷார்ட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருக்கும்  இந்த ‘ஸ்மோக் வெப்சீரிஸை யுனிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.