தமிழ் சினிமாவில் திருமணம் செய்து கொண்டவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன் மற்றும் இயக்குநர் பொன்வண்ணன். கமல் ஹாசன் நடிப்பில் வந்த நாயகன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இந்தப் படம் கொடுத்த வரவேற்பு அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. அதன் பிறகு எத்தனையோ படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
அருள், எம்டன் மகன், திருவிளையாடல் ஆரம்பம், வேல், வேலையில்லா பட்டதாரி, கொடி, விஐபி 2 என்று பல படங்களில் அம்மா ரோலில் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் வாங்காத விருதுகளும் இல்லை. தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். ஒரு நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் இருக்கிறார். என்னமோ நடக்குது என்ற படத்தில் மீச கொக்கு என்ற பாடலை பாடியிருக்கிறார். மகளிர் மட்டும் படத்தில் டைம் பாசுக்கொசுரம் என்ற பாடலையும் இவரே பாடியிருக்கிறார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். பார்க்க ஹீரோயினாக அழகாக இருந்தாலும் இருவரும் இன்னும் சினிமா பக்கமே தலை காட்டவில்லை. அவர்கள் இருவருமே இப்போது மருத்துவராகி இருக்கிறார்கள்.
சினிமாவைப் பொறுத்த வரையில் நடிகரோ, நடிகைகளோ தங்களது மகன் அல்லது மகள்களை சினிமாவில் நடிக்க வைத்து அழகு பார்ப்பார்கள். அப்படித்தான் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் நடித்திருக்கிறது. உதாரணத்திற்கு இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் மகன் தளபதி விஜய் சினிமாவில் கொடி கட்டி பறக்கிறார். இப்போது அவருடைய மகன் சஞ்சய் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். சியான் விகரமின் மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்து வருகிறார். பிரபு மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவில் நடிக்கிறார். சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் நடித்து வருகிறார். சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை தேவயானி கூட தன்னுடைய மகளை பல நிகழ்ச்சிகளுக்கு தன்னுடன் அழைத்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
இப்படி சினிமாவில் நடந்து கொண்டிருக்கும் போது நடிகை சரண்யா பொன்வண்ணன் மட்டும் தன்னுடைய 2 மகள்களை சினிமா பக்கமே வரவிடவில்லை. இப்போது அவர்களை மருத்துவராக்கியிருக்கிறார். கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் படித்து பட்டம் பெற்றிருக்கிறார். சரண்யாவின் மகள் பிரியதர்ஷினி ஸ்ரீ ராமசந்திரா மெடிக்கல் கல்லூரி மற்றும் ரிசர்ச் இன்ஸ்ட்டிடியூட்டில் பட்டம் வென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
நன்றி: தமிழச்சி கயல்விழி