Breaking News :

Thursday, September 12
.

நடிகை ராஷ்மிகா மந்தனா பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டரை வெளியீடு


நடிகர் அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் புஷ்பா கதாபாத்திரம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. இப்போது மீண்டும் புஷ்பாவாக அவர் நடித்திருக்கும் 'புஷ்பா: தி ரூல்' திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது.

சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்த புகழ்பெற்ற பான்-இந்தியா திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது.

இன்று ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளையொட்டி, படத்தில் இருந்து அவரின் அழகான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் முதல் பாகத்தின் மூலம் முத்திரை பதித்த ஸ்ரீவள்ளி மீண்டும் இந்தப் பாகத்திலும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது இந்த போஸ்டரின் மூலம் தெரிகிறது.

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் பிறந்தநாளான ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று படத்தின் டீசர் வெளியாக உள்ளது. 'புஷ்பா: தி ரூல்' படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்ய, எஸ் ராம கிருஷ்ணா மற்றும் என் மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பு செய்திருக்கிறார்கள். திறமையான படக்குழுவின் உழைப்பில் கம்பீரத்துடன் உருவாகி வரும் 'புஷ்பா: தி ரூல்' திரைப்படம் அட்டகாசமான திரையனுபவத்தை ரசிகர்களுக்கு நிச்சயம் கொடுக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.