Breaking News :

Monday, December 02
.

நடிகை மாதவி


நடிகை மாதவிக்கு வயது 61 .

தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்த அழகு நடிகை கண் அழகி மாதவி .

 கே. பாலச்சந்தர் பின்னர் தனது தெலுங்கு திரைப் படமான மரோ சரித்ராவில் (1978) துணை வேடத்தில் நடிக்க வைத்தார் .. அதன் ஹிந்தி ரீமேக்கான ஏக் துஜே கே லியே ல்(1981) அவர் மீண்டும் நடித்தார்,

இரண்டு படங்களிலும், கமல்ஹாசனின் கதாபாத்திரத்தை காதலிக்கும் தனிமையான பணக்கார பெண்ணாக நடித்திருந்தார் . அவர் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது நாமினேஷனைப் பெற்றார்

கே.பாலசந்தர், ரஜினிகாந்துக்கு ஜோடியாக தில்லு முல்லு (1981) மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அவரை அறிமுகப்படுத்தினார். பட திரை முடிவில், அக்னிபத் (1990) என்ற ஹிந்தித் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்தார்.

சிவாஜி கணேசன், பிரேம் நசீர், ராஜ்குமார், என்டிஆர் மற்றும் ஏஎன்ஆர் , தேவானந்த் மற்றும் அமிதாப் பச்சன் போன்ற நம் காலத்தின் சில சிறந்த நட்சத்திரங்களுடன் பணிபுரிந்தது இவருக்கு நல்ல வாய்ப்பு .

மேலும் சிரஞ்சீவி, ரஜினி காந்த், கமல்ஹாசன், விஷ்ணு வர்தன், அம்ப்ரீஷ், மம்மோட்டி, மோகன்லால், சஞ்சய் தத், ஜாக்கி ஷெராஃப் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து விட்டார் .

டிக் டிக் டிக் படத்தில் டூ பீஸ் பிகினி நீச்சல் உடையில் நடிகைகள் ராதா மற்றும் ஸ்வப்னா தோன்றி நடிக பின்வாங்க துணிச்சலுடன் அந்த நீச்சல் உடையில் நடித்தார் . என் உடல்வாகு அந்த உடைக்கு நன்றாக பொருந்தும் என அப்போது பேட்டி கொடுத்து சக நடிகைகளை அலற விட்டார் ஆனாலும் இன்று ஓர் இல்லத்தரசியாக அவதாரம் எடுத்து மிளிர்கிறார் .

1996 ஆம் ஆண்டில் இந்து ஆன்மீக குரு சுவாமி ராமா, அவரைப் பின்பற்றுபவர்களில் ஒருவரான ரால்ப் ஷர்மா என்ற பார்மாசுட்டிக்கால் தொழில் அதிபரை மணந்தார் . அவர்களுக்கு டிஃப்பனி ,பிரிசில்லா,ஈவ்லின் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.குடும்பமே நியூ ஜெர்சியில் வசிக்கின்றனர்.

என்ன ஒரு மாற்றம்! சினிமா நட்சத்திரத்திலிருந்து முழுநேர அம்மாவாகவும், பிசினஸ் வுமனாகவும் மாறிவிட்டார் . மாதவியின் கணவர் ஒரு விமானத்தை வாங்கியவுடன் மாதவி விமானத்தை தனியாக பறக்க விரும்பி, தனது பைலட் பயிற்சியை முடித்து பைலட் உரிமத்தையும் பெற்றுள்ள ஒரே நடிகை மாதவி .

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.