Breaking News :

Friday, May 03
.

நடிகை லிசி வாழ்க்கையில் நடந்தது என்ன?


நடிகை லிசி பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 26 வருடங்கள் கழித்து அவரை விவாகரத்து செய்தார்.

நடிகை லிசி கேரளாவை சேர்ந்தவர். 1982 ஆம் ஆண்டு முதல் மலையாள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு தமிழில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ’விக்ரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது.

அதன் பிறகு அவர் ஆனந்த ஆராதனை, மனசுக்குள் மத்தாப்பு, பகலில் பௌர்ணமி என தமிழில் மொத்தம் நான்கு படங்களில் மட்டுமே நடித்தார். மலையாளத்தில் கிட்டத்தட்ட அவர் 50 படங்களுக்கு மேல் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து அவரை கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு லிசி திரையுலகில் இருந்து விலகி இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு கல்யாணி என்ற மகள் மற்றும் சித்தார்த் என்ற மகன் இருக்கின்றனர். மகள் கல்யாணி தற்போது நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில் கிறிஸ்தவ பெண்ணாக இருந்த லிஸி திடீரென இந்துவாக மாறி லட்சுமி என்றும் பெயர் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர் 2014ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார். 26 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென லிசி – பிரியதர்ஷன் தம்பதி பிரிந்தது மலையாள திரையுலகில் அதிர்ச்சி அடைய வைத்தது.

நடிகை லிசிக்கு சென்னையில் சொந்தமாக பிரிவியூ தியேட்டர் இருப்பதால் அவருக்கு நல்ல வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகி 26 ஆண்டுகள் கழித்து கணவரை விவாகரத்து செய்தாலும் இவர்களது மகன் சித்தார்த் திருமணத்தின் போது இருவரும் திருமணத்தில் கலந்து கொண்டனர். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.

நடிகை லிசிதான் முதல் முதலாக 80களின் நடிகர்களை ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் நடத்தும் ஐடியாவை கண்டுபிடித்தார். அவர் இந்த ஐடியாவை சுகாசினியிடம் கூற 80களின் நடிகர், நடிகைகள் அவரது வீட்டில் முதன்முதலாக கூடி கொண்டாடினர். அதன்பிறகு இன்று வரை 80களின் நடிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இன்றி சென்னையில் வெள்ளம் நடந்த போது லிசி, சுகாசினி, குஷ்பு உள்ளிட்டோர் ஃபேஷன் ஷோ நடத்தி அதில் கிடைத்த பணத்தை சமூக சேவைக்காக செலவு செய்தனர்.

அதேபோல் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போதும் சுமார் 40 லட்ச ரூபாய் வரை நிகழ்ச்சியில் சேர்த்து கேரள அரசுக்கு கொடுத்தனர். இதேபோல் பல்வேறு சமூக சேவைகளை லிசி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமிழச்சி கயல்விழி


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.