Breaking News :

Friday, October 11
.

“மார்ட்டின்” திரைப்படம் அக்டோபர் 11ல் வெளியீடு!


கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும்  “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் அதிரடியாக உருவாகி வரும்  “மார்ட்டின்”  திரைப்படம் 11 அக்டோபர் 2024 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர்  உதய் K  மேத்தா கூறுகையில்..


'மார்ட்டின்' ஒரு திரைப்படம் மட்டுமல்ல, இது எங்களின் கனவுப் படைப்பு. கன்னடத்திலிருந்து பான் இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்‌ஷன் வென்ச்சரை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளோம், அந்த  இலக்கை அடைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது.  ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் 36வது பிறந்தநாளை முன்னிட்டு, 11 அக்டோபர் 2024 அன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் ஒரே நேரத்தில் 'மார்ட்டின்' திரைப்படத்தை வெளியிடவுள்ளோம் என்றார்.

வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய் K  மேத்தா புரொடக்ஷன் நிறுவனங்களின்  சார்பில், உதய் மேத்தா மற்றும் சூரஜ் உதய் மேத்தா ஆகியோர் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பிரம்மாண்ட படைப்பாக  'மார்ட்டின்' படத்தைத்  தயாரித்து வருகின்றனர்.

ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் 'மார்ட்டின்' படத்தினை  AP.அர்ஜுன் இயக்குகிறார்.  கதை, திரைக்கதை ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்கிறார். டோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் மணி ஷர்மா அற்புதமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், மேலும் கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ளார்.

நூற்றுக்கணக்கான டெக்னீஷியன்களின் உழைப்பில் ‘மார்ட்டின்’ படம் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் உருவாகி வருகிறது . வரும்  11 அக்டோபர் 2024 அன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் ஒரே நேரத்தில் 'மார்ட்டின்' திரைப்படம்  வெளியாகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.